வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸூடன் சவூதி அரேபியாவின் வெளிச்செல்லும் தூதுவர் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸூடன் சவூதி அரேபியாவின் வெளிச்செல்லும் தூதுவர் சந்திப்பு

சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல்நாசர் பின் ஹூசைன் அல் - ஹர்தி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 25ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சவூதி அரேபிய நிதியை வழங்குதல் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட ஆதரவு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக வெளிச்செல்லும் தூதுவர் மேற்கொண்ட சிறந்த முயற்சிகளை இச்சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராட்டினார்.

தனது பதவிக் காலத்தின் போது இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நல்கிய ஆதரவிற்காக சவூதி அரேபியாவின் தூதுவர் அல்-ஹார்தி நன்றிகளைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஏப்ரல் 01

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close