நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வகையில், நேரில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு 2021 அக்டோபர் 04, திங்கள் முதல் வேலை நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கு வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவு (2வது மாடி, செலிங்கோ கட்டிடம்) ஆரம்பித்துள்ளது.
பின்வரும் இணைப்பின் மூலம் இணையவழியிலான சந்திப்புகளை பெற்றுக் கொள்வதற்கு சேவைகளை நாடுபவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்: http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING
மேலும், பின்வரும் பிராந்திய கொன்சயூலர் அலுவலகங்களும் வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக திறந்திருக்கும். அந்தந்த மாகாணங்கள் மற்றும் அண்மித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பின்வரும் பிராந்திய கொன்சயூலர் அலுவலகங்களுக்கு விஜயம் செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.
- மாத்தறை - அனகாரிக தர்மபால மாவத்தை, பம்புராண, மாத்தறை, 041-2226697
- யாழ்ப்பாணம் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம், 021-2215972
- கண்டி - மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப நிலையம், 081-2384410
- குருநாகலை - சிறுவர்கள் மற்றும் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களம், 037-2225931
- திருகோணமலை - தலைமை செயலாளர் அலுவலகம், 026-2223186
மேலதிக விவரங்களுக்கு, நீங்கள் கொன்சியூலர் விவகாரப் பிரிவை பின்வரும் வகையில் தொடர்பு கொள்ளலாம்:
சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றுறுதிப்படுத்தல் மற்றும் சரிபார்த்தல்: தொலைபேசி - 2338812/7711194,
மின்னஞ்சல் - authentication.consular@mfa.gov.lk
வெளிநாடுகளில் இலங்கையர்களின் மரணம்: 2338836/3136715
வெளிநாடுகளில் இறந்த இலங்கையர்களுக்கான இழப்பீடு: 2437635/7101193
சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புதல்: 2338837
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகாரங்கள்: 2338847
இதர விடயங்கள்: 2338843
ஏனைய பிரிவு: 2335942
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 அக்டோபர் 06