இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பல்தரப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை இரு தரப்பினரும் வரவேற்றதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
இருதரப்பு அரசியல் உறவுகள், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, இருதரப்பு வர்த்தக விரிவாக்கம், முதலீடு மற்றும் சுற்றுலா, கல்வி மற்றும் பிராந்திய மற்றும் பல்தரப்புத் துறைகளிலான பரஸ்பர ஆர்வம் சார்ந்த விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அதிகரித்த இணைப்பையும், வணிக மற்றும் சுற்றுலா உறவுகளையும் மேலும் பலப்படுத்த வல்ல வகையிலான கொழும்பு மற்றும் பரிஸூக்கு இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படுகின்றமை வரவேற்கப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 அக்டோபர் 20