விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பதில் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம்  செலுத்துகின்றது  'விவசாயப் பொருட்கள் துறையில் கொள்வனவாளரை அணுகும் கலை' தொடர்பான வெபினார்

 விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பதில் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம்  செலுத்துகின்றது  ‘விவசாயப் பொருட்கள் துறையில் கொள்வனவாளரை அணுகும் கலை’ தொடர்பான வெபினார்

ஐரோப்பிய விவசாய சந்தையில் சரியான கொள்வனவாளருடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது குறித்து  இலங்கை விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு கற்பிப்பதில் கவனம் செலுத்தும் 'விவசாயப் பொருட்கள் துறையில் கொள்வனவாளரை அணுகும் கலை' தொடர்பான வெபினாரொன்று 2021 ஆகஸ்ட் 31ஆந் திகதி 180 பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றிய சந்தையை நன்கு புரிந்துகொள்வதற்காக ஏற்றுமதியாளர்களை ஆதரிக்கும் பொருட்டு பெர்லினின் இறக்குமதி மேம்பாட்டு வாரியம் மற்றும் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுடன் இணைந்து  இயற்கை விவசாயப் பொருட்களுக்கு விஷேட முக்கியத்துவமளிக்கும் வகையில் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிகரமான வெபினார்களின் தொடரின் 3வது தொடர் இதுவாகும்.

வரவேற்புரையை வழங்கிய இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் திரு. சுரேஷ் டி மெல், குறிப்பாக  தற்போதைய சூழலில் கோவிட்-19 இன் ஈடுபாடு ஒரு மெய்நிகர் உலகிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொள்வனவாளர்களை அணுகுவதில் தொழில்முறை அணுகுமுறையொன்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சந்தை நுண்ணறிவு முன்னணி நிபுணர் திரு. குஸ்டாவோ ஃபெரோ மற்றும் சர்வதேச வர்த்தக ஆலோசகர் திருமதி  வனேசா குத் ஆகியோர் அதிக ஊடாடும் மன்றத்தை நடாத்தியதுடன், ஐரோப்பிய கொள்வனவாளர்களுடன் ஆரோக்கியமான வணிகக் கூட்டாண்மைக்குள் நுழையும் போது மூலோபாய தகவல்தொடர்பு முக்கியமானதாகும் என்ற தமது விஷேட அறிவைப் பகிர்ந்து கொண்டனர். இரண்டு நிபுணர்களும் ஐரோப்பிய சந்தை அணுகல் புள்ளிகள், மொத்த விற்பனையாளர் / இறக்குமதியாளர் தேவைகள், பொதியிடல் மற்றும் சிட்டையிடல் மற்றும் சில்லறை சந்தைத் தேவைகள் பற்றிய சமீபத்திய தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் பொதுத் தரவு பாதுகாப்பு விதிமுறைகளால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு இந்த அமர்வில் விஷேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இலக்கு நிறுவனங்களின் சரியான மையப் புள்ளியை அடைவதில் இத்தகைய தடைகளைத் தவிர்க்கக்கூடிய புதுமையான தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டன.

இலங்கை இயற்கை ஈரமற்ற பழங்கள் மற்றும் இயற்கை சுவையூட்டிகளின் ஏற்றுமதியாளரான வோர்கா நெச்சுரல்ஸின் தலைவர் மற்றும் நிறுவனர் திரு. நிஷாந்த ஜயதிலக்க அவர்களால் ஐ.பி.டி.யின் ஆதரவுடன் தான் வெற்றிகரமாக  ஐரோப்பிய சந்தையில் எவ்வாறு நுழைந்தார் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொள்வனவாளர்களுடனான தனது முதல் மற்றும் கையாளுதல் அனுபவம் குறித்து ஒரு ஆய்வு வழங்கப்பட்டது.

இலங்கை விவசாய ஏற்றுமதியாளர்கள் தமது கேள்விகளை எழுப்பவும், ஐரோப்பிய நிறுவனங்களுடனான ஈடுபாட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தெளிவுபடுத்தவும் வாய்ப்பளித்த நிபுனர் மன்றத்தை  பெர்லினின் இறக்குமதி ஊக்குவிப்பு அமைப்பின் சர்வதேச வர்த்தக ஆலோசகர் திருமதி. லிண்டா மென்ஸால் வழிநடத்தப்பட்டது.

அமர்வின் முடிவில், இந்த முயற்சியில் நிபுணர்கள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, ஐ.டி.பி. மற்றும் வெளிநாட்டு  அமைச்சின் ஆதரவைப் பாராட்டிய ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே, 2021 செப்டம்பர் இறுதியில் நடைபெறவிருக்கும் 'ஐரோப்பிய தரநிலைகள் மற்றும் சான்றிதழ்கள்' குறித்த வெபினாரில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். முழுமையான இயற்கை விவசாய தேசத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஜேர்மன் இயற்கை விவசாய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்காக தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் தூதுவர் உனம்புவே விளக்கினார்.

இலங்கைத் தூதரகம்

பெர்லின், ஜேர்மனி

2021 செப்டம்பர் 07

Please follow and like us:

Close