லெபனானில் இருந்து 5வது வெளியேற்றும் விமானம் 2021 மார்ச் 31ஆந் திகதி புறப்பட்டது

லெபனானில் இருந்து 5வது வெளியேற்றும் விமானம் 2021 மார்ச் 31ஆந் திகதி புறப்பட்டது

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பட்டய விமானம் யு.எல். 554 இன் மூலம் 4 சிறுவர்கள் உள்ளடங்கலான 175 இலங்கையர்கள் அடங்கிய குழுவை இலங்கை ஜனாதிபதி செயலகம், வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 மார்ச் 31ஆந் திகதி திருப்பி அனுப்பியது.

இலங்கைக்கு நாடு திரும்புவதற்காக பதிவுசெய்யப்பட்ட வெளியேற்றப் பட்டியலில் இருந்த 1384 நபர்களுக்கு தூதரகத்தினால் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களில் 860 பேர் பல காரணங்களைக் கூறி வெளியேறுவதற்கு மறுத்துவிட்டனர். 348 இலங்கையர்கள் கட்டார் எயார்வேஸ் மூலம் டிக்கெட்களைப் பெற்று தரையிறங்குவதற்கான அனுமதியைக் கோரினர்.

லெபனான் வெளிவிவகார மற்றும் குடியேற்றவாசிகள் அமைச்சு, தொழிலாளர் அமைச்சு, பொது பாதுகாப்பு  இயக்குநரகம் (குடிவரவுத் திணைக்களம்), சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ரபிக் ஹரிரி சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வெளியேற்றத்திற்கான உதவிகளை நல்கினர்.

இந்த நாட்டிற்கு மீள அனுப்பி வைக்கும் பணிக்காக தூதுவர் திருமதி. ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன, இரண்டாம் செயலாளர் (தொழிலாளர்) திரு. டி. லக்ஷ்மிதரன் மற்றும் தூதரக ஊழியர்கள் வசதிகளை வழங்கினர்.

 இலங்கைத் தூதரகம்

பெய்ரூட்

2021 ஏப்ரல் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close