லும்பினியில் உள்ள ஸ்ரீ லங்கா மகா விகாரையில் கட்டின பூஜை நிறைவு

 லும்பினியில் உள்ள ஸ்ரீ லங்கா மகா விகாரையில் கட்டின பூஜை நிறைவு

லும்பினியில் உள்ள ஸ்ரீ லங்கா மகா விகாரையின் கட்டின பூஜை (புதிய அங்கிகள் வழங்கும் சடங்கு) வைபவம் 2021  ஒக்டோபர் 31ஆந் திகதி லும்பினி மடாலயத்தில் உள்ள அனைத்து பௌத்த மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினர் மற்றும் சாதாரண பௌத்த பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதுவர் மற்றும் பணியாளர்களால் இந்த ஆண்டும் கட்டின பூஜை அனுசரணை செய்யப்பட்டது. காத்மாண்டுவில் உள்ள இலங்கையர்களும் இந்த விஷேட நிகழ்விற்குப் பங்களித்தனர்.

லும்பினியில் உள்ள ஸ்ரீ லங்கா மகா விகாரையின் அறங்காவலர் கலாநிதி வணக்கத்திற்குரிய கல்லஹெபிட்டியே  பேமரத்தன தேரரின் ஆலோசனையுடன், வதிவிடப் பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய சாஸ்த்ரவேதி திஸ்ஸமஹாராமயே பன்னசார தேரரின் நெருங்கிய வழிகாட்டுதலின் கீழ், சியாம் மஹா நிகாயாவின் மல்வத்து பீடத்தின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரினால் கட்டின பூஜை வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இளவரசர் சித்தார்த்தர் பிறந்த மாயாதேவி விகாரையில் ஆசிர்வாத பஹன் பூஜை மற்றும் பிரித் ஓதல் வைபவத்துடன் அக்டோபர் 30ஆந் திகதி மாலை சமய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. ஒக்டோபர் 31ஆந் திகதி அதிகாலையில், கட்டின  சீவர மாயாதேவி விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஸ்ரீ லங்கா மகா விகாரைக்குக் கொண்டுவரப்பட்டு, வழக்க முறைகளுக்கு அமைய மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதிய அன்னதானத்திற்குப் பின்னர் கடின சீவர அன்னதானம் வழங்கப்பட்டது. லும்பினி பௌத்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் வணக்கத்திற்குரிய நேபாலயே சங்கிச்ச தேரர் கடினானிசஞ்ச பிரசங்கத்தை நிகழ்த்தினார்.

நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலக, சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் எசல வீரகோன், நேபாள ஆயுதப் பொலிஸ் படையின் பொலிஸ்மா அதிபர் சைலேந்திர கானல், இலங்கைத் தூதரகம், சார்க் செயலகம் மற்றும் இலங்கை துட்டுகெமுனு யாத்ரீகர்கள் ஓய்வகத்தின் அதிகாரிகள், நேபாளத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் ஏனைய விருந்தினர்களின் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சமய இந்த நிகழ்வுகள்  இடம்பெற்றன.

இலங்கைத் தூதரகம்,

காத்மாண்டு

2021 நவம்பர் 05

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close