ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் சவுதி சுற்றுலா இயக்குனர்களுக்காக 'ஹலோ அகெய்ன் ஸ்ரீ லங்கா'  விழிப்புணர்வு வெபினாரை முனனெடுப்பு

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் சவுதி சுற்றுலா இயக்குனர்களுக்காக ‘ஹலோ அகெய்ன் ஸ்ரீ லங்கா’  விழிப்புணர்வு வெபினாரை முனனெடுப்பு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஆதரவுடன் சவுதியின் வெளிச்செல்லும் சுற்றுலா இயக்குனர்களுக்கான விழிப்புணர்வு வெபினாரை 2021 ஆகஸ்ட் 28ஆந் திகதி சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. சவுதி அரேபியாவின் ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டா உட்பட பல நகரங்களில் செயற்படும் வெளிநாடுகளில் வெளிச்செல்லும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபடும் 90 சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகளை இந்த வெபினார் ஈர்த்தது.

தனது வரவேற்புரையில், வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) திரு. பி.எம்  அம்சா, இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையேயான வரலாற்று இருதரப்பு உறவுகள் குறித்து விளக்கினார். 'உங்களின் அடுத்த இலக்காக நீங்கள் இலங்கையைத் தேர்வு செய்ய வேண்டுமென விரும்புகின்றேன். இயற்கையாக இருந்தாலும் சரி, கலாச்சாரமாக இருந்தாலும் சரி, சாகசமாக இருந்தாலும் சரி, எனது நாட்டை நீங்கள் எப்படி அனுபவிக்க விரும்புகிறீர்களோ, நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் வழங்கும் இடம் இலங்கையாகும்' என திரு. அம்சா மேலும் தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலா உத்தி மற்றும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய தற்போதைய சுகாதார நெறிமுறைகள்  குறித்து முக்கிய குறிப்பு விளக்கக்காட்சியில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி. மதுபானி பெரேரா விளக்கினார். சவுதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேம்படுத்தும் வகையில், எதிர்கால சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்) திரு. துஷான் விக்கிரமசூரிய  தனது உரையில், கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் பயணம் செய்வதற்கு ஆர்வமாகக் காத்திருப்பதனால், இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையே வசதியான விமான இணைப்பு பார்வையாளர்களை ஈர்க்கும் ஆதலால், விருந்தோம்பல், இயற்கை, கலாச்சாரம், உணவு மற்றும் பலவற்றை மதிப்பிடும் சிறந்த சுற்றுலாத் தலமாக, இலங்கையைக் கருதும்  சவுதி பார்வையாளர்களின் நேர்மறையான இயக்கவியல் குறித்து விளக்கினார்.

சவுதி அரேபியாவிலிருந்து விருந்தினர்களைப் பெறுவதற்கான தொழில் தயார்நிலை குறித்த அனைத்து சுகாதார  வழிகாட்டுதல்களையும் அதிகபட்சமாகப் பின்பற்றி, பார்வையாளர்களுக்கு சிறந்த ஆறுதலைத் தருவதாக, இலங்கை உள்வரும் சுற்றுப்பயண இயக்குனர்கள் சங்கத்தின் குழு உறுப்பினர் திரு. நாலக அமரதுங்க, இலங்கை ஹோட்டல் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. அமல் குணதிலக்க, சுற்றுலாத்துறையில் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் சங்கத்தின் உறுப்பினர் திரு. தினேஷ் பத்திரன குறிப்பிட்டனர்.

சவுதி வெளிச்செல்லும் சுற்றுப்பயண இயக்குனர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சுற்றுப்பயணத் தலைவரும், அர்ஜா டிரவல்ஸ் அண்ட் டூரிஸத்தின் எம்.ஐ.சி.இ.யுமான திரு. ஹூசைன் ஹரிரி, சவுதி சுற்றுலாப் பயணிகள்  இலங்கையை அடைவதற்கான விமானப் பயண விருப்பங்கள், சவுதி அரேபியாவிலிருந்து பயணிகள் மற்றும் விசா வசதிகள் குறித்து விளக்கினார். சவுதி பிரஜைகள் மற்றும் இராச்சியத்தில் வாழும் ஏனைய வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதற்கு வசதியாக தமது ஆதரவை வழங்குவதாகவும் திரு. ஹரிரி தெரிவித்தார்.

தூதரகத்தின் பொறுப்பாளர் திரு. துல்மித் வருண நிறைவுரையை வழங்கியதுடன், அமைச்சர் (வணிகம்) திரு. சஞ்சீவ பட்டிவில நிகழ்வை நெறிப்படுத்தினார்.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்

2021 செப்டம்பர் 30

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close