ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆதரவின் கீழ், மென்பொருள் மற்றும் சேவை நிறுவனத்திற்கான இலங்கை சங்கம் மற்றும் இன்ட்@ஜே ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2022 அக்டோபர் 27ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டது. மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனத்திற்கான இலங்கை சங்கத்தின் சார்பாக தலைவர் ஆஷிக் எம். அலி மற்றும் இன்ட்@ஜே க்கான தலைவர் அம்ஜாத் ஸ்வாய்ஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜோர்டானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானிகா திசாநாயக்க, ஐ.என்.டி, இன் தலைமை நிறைவேற்று அதிகாரி நிடல் பிடார் மற்றும் இரு சங்கங்களினதும் உறுப்பினர்களின் முன்னிலையில் மெய்நிகழ் ரீதியாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், வாய்ப்புக்கள் மற்றும் முதலீடுகளை ஆராய்வதற்கும், அந்தந்த சங்கங்களில் ஐ.சி.டி.பிபிஎம் நிறுவனங்களுக்கான வலையமைப்பை மேறடகொள்வதற்கான பயணத்தை அதிகரிப்பதற்கும் இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒத்துழைக்கவுள்ளனர். மென்பொருள் மற்றும் சேவை நிறுவனத்திற்கான இலங்கை சங்கம் அதன் தலைவர் ஆஷிக் அலி வழிகாட்டுதலின் கீழ் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மென்பொருள் நிறுவனங்களுக்கு வாய்ப்புக்களைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளை அதிகரிப்பதற்காக விரைவில் வணிக அமர்வுகள் நடாத்தப்படவுள்ளன.
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனத்திற்கான இலங்கை சங்கம் மற்றும் இன்ட்@ஜே ஆகிய இரு உறுப்பினர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை மற்றும் ஜோர்தானில் உள்ள தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்புக்களில் நுழைவதற்கான வழிகளைத் திறக்கும் என ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானிகா திசாநாயக்க குறிப்பிட்டார். வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்குமானதொரு முக்கிய தூணாக டிஜிட்டல் மாற்றம் இருப்பதால், மென்பொருள் துறையின் வெவ்வேறு பரிமாணங்களில், குறிப்பாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கு படைப்பாற்றலைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தூதரகம்,
அம்மான்
2021 அக்டோபர் 31