மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் மறைவு

மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் மறைவு

2022 ஜனவரி 17ஆந் திகதி, திங்கட்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக இத்தாலியின் மிலான்  நகரில் காலமான, மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்க அவர்களின் மறைவை ஆழந்த வருத்தத்துடன் வெளிநாட்டு அமைச்சு அறியத்தருகின்றது.

தற்போது மிலானில் உள்ள சன் ரஃபேல் வைத்தியசாலையில் உள்ள மறைந்த துணைத்  தூதுவர் விக்கிரமசிங்கவின் பூதவுடல், இத்தாலி மற்றும் இலங்கை அதிகாரிகளின் இணக்கப்பாட்டுடன் உரிய நடைமுறைகள் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.

மறைந்த விஷாரத நீலா விக்கிரமசிங்க 2021 டிசம்பர் 29ஆந் திகதி இத்தாலியின் மிலான் நகரில் இலங்கையின் துணைத் தூதுவராகப் பொறுப்பேற்றார்.

மறைந்த துணைத் தூதுவர் விக்கிரமசிங்கவின் குடும்பத்தாருக்கும், இந்த துக்கத்தின் போது  அவரை இழந்து வாடும் நபர்களுக்கும் வெளிநாட்டு அமைச்சு தனது ஆழ்ந்த  அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 ஜனவரி 18

Please follow and like us:

Close