இலங்கை மக்களுக்கான மருத்துவப் பொருட்கள் வடிவிலான மனிதாபிமான உதவிக்காக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐ.டி.ஆர். 22,155,952,245.00 அல்லது 1.5 மில்லியன் டொலர் மொத்த பெறுமதியான 11 வகையான மருந்துகளையும் 8 வகையான மருத்துவ உபகரணங்களையும் இந்தோனேசிய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியது.
மனிதாபிமான உதவிகள் வழங்கும் விழா 2022 ஏப்ரல் 28ஆந் திகதி சோகர்னோ ஹட்டா சர்வதேச விமான நிலையத்தின் கபுரா ஏற்றுமதி கிடங்கு கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தோனேசியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு யசோஜா குணசேகரவிடம் இந்த நன்கொடை இந்தோனேசியாவின் சுகாதார அமைச்சின் செயலாளர் நாயகத்தினால் கையளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் நாட்டு அலுவலகம், இந்தோனேசியாவின் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தோனேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மருத்துவப் பொருட்கள் 2022 ஏப்ரல் 28 மற்றும் மே 08 ஆகிய திகதிகளில் முறையே ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானங்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்படும்.
இந்தோனேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகம்,
ஜகார்த்தா
2022 மே 05