மணிலாவில் உள்ள கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரியின் 12வது பணிப்பாளர் நாயகமாக  முதலாவது இலங்கையர் நியமனம்

மணிலாவில் உள்ள கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரியின் 12வது பணிப்பாளர் நாயகமாக  முதலாவது இலங்கையர் நியமனம்

இலங்கையை தலைமையிடமாகக் கொண்ட கொழும்புத் திட்டத்தின் பயிற்சிப் பிரிவான மணிலாவில் உள்ள  கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரி, வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கணேமுல்லே லேகமாலகே தர்மஸ்ரீ விக்கிரமசிங்க, பி.எச்.டி. யை அதன் 12வது தலைமை பணிப்பாளர் நாயகமாக நியமித்துள்ளது. அவர் 2021 செப்டம்பர் 01ஆந் திகதி பதவியேற்றார்.

திறமையான மற்றும் விருது பெற்ற கல்வியாளரான பேராசிரியர் விக்கிரமசிங்க, இலங்கையில் ஒரு காலப்பகுதியில் அவர் பெற்ற தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் கல்வித் துறையிலான தனது சிறந்த அனுபவத்தை கொழும்புத் திட்டத்தின் டி.வி.இ.டி. அமைப்பிற்கு கொண்டு வந்துள்ளார். அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சித்தியடைந்த ஆடை பொறியியலில் இளங்கலை விஞ்ஞானப் பட்டதாரியாவார். மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற அவர், கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான பட்டப்பின்படிப்பு சான்றிதழழை  ஐக்கிய இராச்சியத்தின் ஆர்ட்ஸ் லண்டன் பல்கலைக்கழகத்திலும், தனது வர்த்தக நிர்வாக முதுமாணிப் பட்டத்தை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

உறுப்பு நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பங்குதாரர் அமைப்புக்களுக்கு மேற்கொள்ளப்படும்  நிலையான அபிவிருத்திக்கான அரசாங்கங்களுக்கிடையிலான டி.வி.இ.டி. தலைமையாக மாறுவதற்கான அதன் நோக்கத்தை உறுதிசெய்யும் வகையில், கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரியின் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பை புதிய பணிப்பாளர் நாயகமாக அவர் வகிப்பார். அவர் ஆசிய - பசிபிக் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் ஆணைக்குழுவின் தலைவராகவும் செயற்படுவார்.

கொழும்புத் திட்ட பணியாளர் கல்லூரி 1973 இல் நிறுவப்பட்ட கொழும்புத் திட்டத்தின் ஒரு தன்னாட்சி மிகுந்த  விஷேட நிறுவனமாகும். தனித்துவமான அரசாங்கங்களுக்கு இடையேயான அமைப்பான இந்த நிறுவனம், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. கொழும்புத் திட்ட பணியாளர் கல்லூரியில் 26 உறுப்பு நாடுகள் பட்டய மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. செயலில் உள்ள 16 உறுப்பு நாடுகள் (ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், பிஜி, இந்தியா, மலேசியா, மாலைதீவு, மங்கோலியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து), 12 பட்டய உறுப்பு நாடுகள் (அவுஸ்திரேலியா, கம்போடியா, கனடா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், தென் கொரியா, லாவோஸ், நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, வியட்நாம்) ஆகியன ஆகும்.

இலங்கைத் தூதரகம்

மணிலா

2021 செப்டம்பர் 13

Please follow and like us:

Close