ப்ரெமனின் ஃப்ரீ மற்றும் ஹென்சீடிக் நகரிற்கு தூதுவர் விஜயம்

 ப்ரெமனின் ஃப்ரீ மற்றும் ஹென்சீடிக் நகரிற்கு தூதுவர் விஜயம்

நட்புறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 2021 செப்டம்பர் 23 -24 வரையான காலப்பகுதிக்கு ப்ரெமனின் ஃப்ரீ மற்றும் ஹென்சீடிக் நகரிற்கு ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே விஜயம் செய்தார். கடல்,  கப்பல் போக்வரத்து, காற்றாலை சக்தி, வாகனங்கள், விண்வெளி, உணவு மற்றும் பானங்கள் போன்ற முக்கிய தொழில் துறைகiயுடைய பரந்த மற்றும் மாறுபட்ட பொருளாதாரத்தைத் அனுபவிக்கின்ற ப்ரெமன் ஒரு கூட்டாட்சி மாநிலமாகும்.

இந்த விஜயத்தின் போது, ப்ரெமனின் ஃப்ரீ மற்றும் ஹென்சீடிக் நகரின் மாண்புமிகு மேயரும், செனட்டின் தலைவருமான கலாநிதி. அண்ட்ரியாஸ் போவென்சுல்டேவை சந்தித்து, குறிப்பாக ப்ரெமனின் மேம்பட்ட கடல் தொழிலின்  பின்னணியில், இலங்கை மற்றும் ப்ரெமன் இடையேயான உறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியமான வழிகள் குறித்து தூதுவர் மனோரி உனம்புவே கலந்துரையாடினார். வரலாற்றுச் சிறப்புமிக்க ப்ரெமன் டவுன்ஹோலில் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திடும் கௌரவமும் தூதுவருக்கு வழங்கப்பட்டது.

ப்ரெமன் பாராளுமன்றத் தலைவர் திரு. ஃப்ராங்க் இம்ஹாஃப் உடனான சந்திப்பு, இரு தரப்பினரும் நெருக்கமான  ஒத்துழைப்புடன் பணியாற்ற உறுதியளித்த ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்ததுடன், குறிப்பாக வர்த்தகம் மற்றும் கடல்சார் துறைகளில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்தனர்.

ப்ரெமனில் உள்ள வர்த்தக சங்கத்தின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் உப தலைவர் திரு. எட்வர்ட் டப்பர்ஸ்-ல்பிரெக்ட் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. வோல்க்மர் ஹெர் ஆகியோரை தூதுவர்  உனம்புவே சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது தூதுவர் இலங்கையின் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் கொழும்புத் துறைமுக நகரத்தில் வரவிருக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை எடுத்துரைத்தார். நீர்ப்பாசனம், பொறியியல், உணவு, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் கடல்சார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ப்ரெமனில் உள்ள முக்கிய வணிகத் தலைவர்களின் குழுவையும் தூதுவர் சந்தித்தார்.  சில நிறுவனங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக இலங்கையுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும், இலங்கையை  தமது எதிர்கால முதலீடுகளுக்கான இலக்காகக் கருதுவதற்கான அழைப்பை தூதுவர் உனம்புவே புதுப்பித்தார்.

ப்ரெமன் சுமார் 4,000 இலங்கையர்களைக் கொண்டிருப்பதால், ப்ரெமனில் உள்ள இலங்கையின் கௌரவ தூதுவர்  திரு. தோமஸ் கிரிவாட் அவர்களின் இல்லத்தில வைத்து, இலங்கையர்களை தூதுவர் சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்தி இயக்கத்திற்கான தொடர்ச்சியான ஆதரவிற்கு தூதுவர் அழைப்பு விடுத்ததுடன், இலங்கை சமூகத்திற்குள் நெருக்கமான உறவுகளை கட்டியெழுப்ப ப்ரெமனில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது.

ப்ரெமன் மற்றும் லோவர் சாக்சோனியின் வடக்குப் பகுதியில் உள்ள இலங்கையின் கௌரவ தூதுவர் திரு. தோமஸ்  கிரிவாட் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்தார்.

இலங்கைத் தூதரகம்,

பேர்லின்

2021 அக்டோபர் 04

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close