பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப்பில் உள்ள கௌரவத் தூதுவரின் சேவை நீடிப்பு

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப்பில் உள்ள கௌரவத் தூதுவரின் சேவை நீடிப்பு

பெல்ஜியம், அன்ட்வெர்ப் நகரில் உள்ள கௌரவத் தூதுவர் திருமதி மோனிக் டி டெக்கர் - டெப்ரெஸ் பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் அவர்களிடமிருந்து தனது சேவை நீடிப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். திருமதி டி டெக்கர் - டெப்ரெஸ் 24 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பதவியை வகித்து வருகின்றார். இலங்கைக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, 2005ஆம் ஆண்டு இலங்கையினால் 'ஸ்ரீ லங்கா ரஞ்சனா' என்ற தேசியப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையின் கௌரவத் தூதுவரான திருமதி. மோனிக் டி டெக்கர் - டெப்ரெஸ், தற்போது பெல்ஜியத்தில் உள்ள நூற்றி இருபது கௌரவத் தூதுவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக  ஒன்றியத்தின் தலைவராக கௌரவமான பதவியை வகிக்கின்றார்.

இலங்கைத் தூதரகம்,

பிரஸ்ஸல்ஸ்

2021 டிசம்பர் 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close