பெப்ரவரி 2022 இல் துபாய் எக்ஸ்போவில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்களின் கண்காட்சிக்கு ஓமானி வர்த்தக சகோதரத்துவம் அழைப்பு

பெப்ரவரி 2022 இல் துபாய் எக்ஸ்போவில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்களின் கண்காட்சிக்கு ஓமானி வர்த்தக சகோதரத்துவம் அழைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் 2022 பெப்ரவரி 17 முதல் 20 வரை எக்ஸ்போ துபாயில் நடைபெறவுள்ள இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்களின் கண்காட்சி ஓமானிய வர்த்தக சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்காக 2022 ஜனவரி 1 முதல் 5 வரை ஓமானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஷிஹாம் மரிக்காருடன் இணைந்து ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், ஓமான் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தலைவரான பொறியிளலாளர் ரெதா பின் ஜுமா அல் சலே மற்றும் துபாய் எக்ஸ்போ 2020 இல் ஓமான் ஆணையாளர் நாயகம் மற்றும் மஸ்கட்டில் உள்ள வர்த்தக, தொழில் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் மொஹ்சென் காமிஸ் அல் பலுஷி ஆகியோரைச் சந்தித்து, அவர்களுக்கு இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாம கண்காட்சியின் விவரங்கள் குறித்து விளக்கினார்.

'இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமம்' என்பது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முன்னணி ஏற்றுமதி வர்த்தக நாமங்களைக் காண்பிக்கும் ஒரு பல்துறைக் கண்காட்சியாகும். உணவு மற்றும் பானங்கள், இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், இயற்கை மற்றும் மூலிகைப் பொருட்கள், இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த பொருட்கள், சுவையூட்டிகள் மற்றும் சுவையூட்டி சார்ந்த பொருட்கள், தேயிலை மற்றும் தேயிலை சார்ந்த பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்கள், கண்ணாடி மற்றும் கண்ணாடி சார்ந்த பொருட்கள், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள், மலர் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைப் பொருட்கள், செயற்கை மற்றும் இயற்கை கைவினைப்பொருட்கள், பொதியிடல் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு அமைப்புக்கள், இயந்திரங்கள் மற்றும் ஒளி சார் பொறியியல் பொருட்கள், ஏற்றுமதித் துறைக்கான சேவை வழங்குநர்கள், வணிகம் மற்றும் தொழில்முறை சேவைகள் போன்றவற்றை 75 இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2022 பிப்ரவரி 17 முதல் 20 வரையிலான எக்ஸ்போ துபாயில் காட்சிப்படுத்துவர். தமது தயாரிப்புக்கள் / சேவைகளை காட்சிப்படுத்தும் 75 இலங்கை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சாத்தியமான ஓமானிய பார்வையாளர்கள் சந்திக்கலாம் என்பதுடன், மாதிரிகளைப் பார்வையிட்டு, தமது தேவைகள் குறித்து அவர்கள் கலந்துரையாட முடியும்.

எக்ஸ்போ துபாயில் நடைபெறும் மேற்கூறிய இலங்கைக் கண்காட்சியை பார்வையிடுவதன் மூலம் ஓமானி வர்த்தக சகோதரத்துவம் பெரிதும் பயனடையும் அதே வேளை பரஸ்பர ஆர்வத்தின் சம்பந்தப்பட்ட துறைகளில் வணிக இணைப்புக்களை ஏற்படுத்த அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என தூதுவர் அமீர் அஜ்வத் குறிப்பிட்டார்.

செயலாளர் நாயகம் ஷிஹாம் மரிக்கார் அவர்களுக்கான சில்லறை வணிகங்கள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்கள் உட்பட முன்னணி தனியார் நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் / பிரதிநிதிகள் மற்றும் ஓமான் சுல்தானேற்றில் உள்ள ஊடகவியலாளர்களுடன் தொடர்ச்சியான வணிக சந்திப்புகக்ளை ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2022 ஜனவரி 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close