பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் திரு. தாரக்க பாலசூரிய 2021 ஒக்டோபர் 04-08 வரை பிரான்சுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார்.
2021 ஒக்டோபர் 08ஆந் திகதி, அமைச்சர் மற்றும் முதலீட்டுச் சபையின் தலைவர் திரு. சஞ்சய மொஹொட்டால ஆகியோர் பிரான்சின் எண்டர்பிரைசஸ் இயக்கத்தின் உப தலைவர் மற்றும் பிரான்ஸ் - இலங்கை வர்த்தக சபையின் தலைவர் திரு. பிரான்சுவா கார்பின் மற்றும் தெற்காசிய திட்ட முகாமையாளர் திருமதி. அனாஸ் வசல்லோ ஆகியோரை சந்தித்தனர்.
மேலும், யுனெஸ்கோவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் தலைவர் திரு. அசோக் பத்திரகே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கைப் பயணத்தை அறிமுகப்படுத்திய இராஜாங்க அமைச்சர் திரு. தாரக்க பாலசூரிய, காலனித்துவத்தின் விளைவுகள் தொடர்பாக சிங்கப்பூர் மற்றும் இலங்கையின் தலைவிதிகளை ஒப்பிட்டு, போர் முடிந்த பின்னரான அதிக வளர்ச்சி விகிதங்கள், கல்வி சீர்திருத்தங்களின் பங்கை வலியுறுத்தினார்.
முதன்மையான அனுகூலமாக இலங்கையின் இருப்பிடத்தின் பங்களிப்பும் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், இது ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு மையமாக உள்ள அதே வேளை, பிரான்சுக்கு கப்பல் போக்குவரத்து ஆதாயங்களை உண்டாக்கும் (நன்கு தழுவி, உபகரணங்களிடப்பட்டுள்ள துறைமுகங்கள்).
மிக முக்கியமாக, இந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருப்பதால், எந்த ஒரு சதிப்புரட்சியும் இல்லாமல், ஜனநாயக விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளும் நீண்ட அரசியல் ஸ்திரத்தன்மையால் இலங்கை பயனடைந்துள்ளது. இலங்கை ஒரு அணிசேரா / நடுநிலை சர்வதேசக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் 2000 களின் முற்பகுதியில் இருந்து போர்ட் சிட்டி திட்டம் போன்ற நிலையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தின எனக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பிரதான சொத்துக்கள் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், திரு. சஞ்சய மொஹொட்டால கடந்த 10 வருடங்களில் இலங்கையின் உயர் மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை அறிமுகப்படுத்தினார். ஹம்பாந்தோட்டை உட்பட 2 பெரிய துறைமுகங்கள் மற்றும் 3 சர்வதேச விமான நிலையங்கள் மூலம் இலங்கை பயனடைகின்றது. தெற்காசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் 2.1 பில்லியன் நுகர்வோருடன், சிறந்த சந்தை அணுகல் மூலம் நாடு பயனடைகின்றது எனக் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காக தூதுவர் பேராசிரியர் ஹிரிம்புரேகம பாராட்டியதுடன், வணிக நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருமாறு நிறுவனங்களை ஊக்குவித்தார்.
வலுவான திறமை வாய்ந்த பணியாளர்கள் மற்றும் பிராந்தியத்தில் மிகவும் வாழக்கூடிய நாடு, போட்டித்தன்மையின் அடிப்படையில் பிராந்தியத்தில் 2ஆவது எண்ணில் இலங்கைக்கு உதவியது. கொழும்பு வாழ்வதற்கான நகரமாக இருக்கும்போது, தெற்காசியாவில், இலங்கை தொழில்துறைத் தளமும் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரமும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இலங்கை ஒரு உற்பத்தி மையமாக பின்வரும் பொருளாதாரப் பிரிவுகளால் இயக்கப்படுகின்றது: மருந்துகள், ஆடைகள் (தொழிலாளர் தரநிலைகள், நியாயமான சம்பளம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு முக்கிய ஆதார இலக்கு), அபிவிருத்தியடைந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வி, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மற்றும் ஏனைய சேவைகளால் இயக்கப்படும் இலத்திரணியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (2021க்குள் 3 பில்லியன் டொலர் ஏற்றுமதி).
எம்.இ.டி.இ.எஃப். இன்டர்நேஷனலின் துணைத் தலைவர் திரு. பிரான்சுவா கார்பின் பிரெஞ்சு இலங்கை வணிக சமூகங்களுக்கிடையே பரஸ்பர அறிவைப் பரிமாறிக்கொள்ளும் கலந்துரையாடலைப் பாராட்டினார். எம்.இ.டி.இ.எஃப். தூதுக்குழு இலங்கை பசுமை நோக்குநிலை மற்றும் முன்னேற விருப்பத்துடன் முன்மொழியப்பட்ட துறைகளின் எண்ணிக்கையால் மிகவும் ஈர்க்கப்பட்டது.
இலங்கைத் தூதரகத்திலிருந்து யுனெஸ்கோவுக்கான தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம, இரண்டாம் செயலாளர் திருமதி. துலாஞ்சி ஹேரத், மூன்றாம் செயலாளர் திரு. அமில திசாநாயக்க மற்றும் திரு. நிக்கொலஸ் கிரெடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை தூதரகம்,
பாரிஸ்
2021 அக்டோபர் 25