பிராங்பேர்ட் ரீன்மெயினில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, பிராங்பேர்ட் ரைன் மெயின் ஜி.எம்.பி.எச். மற்றும் மெயின்ஸ்டேஜ் ஹப் ஆகியவற்றுடன் இணைந்து 'துடிப்பான தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்புக்களில் இலங்கையை பிராங்பேர்ட் சந்திக்கிறது' என்ற தலைப்பில் ஒரு வெபினாரை ஏற்பாடு செய்தது.
ஏறக்குறைய 50 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட வெபினாரில் பிராங்பேர்ட் ரீன்மெயின் பகுதியில் ஆய்வு செய்து ஐரோப்பாவில் தமது இருப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இலங்கை தொழில்முனைவோருக்கு தெரிவிக்கும் பிராங்பேர்ட் ரீன்மெயின் பிராந்தியத்தின் தொடக்க அமைப்பு சுற்றுச்சூழல் பற்றிய கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த உரையாடல் முதன்மையாக இலங்கை தொடக்க அமைப்புக்களை உயர்த்தும் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பகிர்ந்து கொள்ள உதவியதுடன், இந்த தொடக்க அமைப்புக்கள் பிராங்பேர்ட் ரீன்மெயினுக்கு கொண்டு வரும் நன்மைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளர் திருமதி. இந்துமினி கொடிகார, பிராங்பேர்ட் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தந்த விஷேட பேச்சாளர்களையும் பங்கேற்பாளர்களையும் அன்புடன் வரவேற்றார். கடந்த தசாப்தத்தில் இலங்கையின் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன், இந்த ஆண்டு புதுமைகள் 50மூ அதிகரிக்கும் என கணிப்புக்கள் கணித்துள்ளன.
இரு நாடுகளின் தொடர்புகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை துணைத்தூதுவர் மதுரிகா ஜோசப் வெனிங்கர் தனது அறிமுகக் கருத்துக்களில் வழங்கியதுடன், கோவிட்-19 தொற்றுநோயின் போது தகவல் தொழில்நுட்பத் துறை மிகவும் நெகிழ்ச்சியுடன் இருந்ததாக வலியுறுத்தினார். 'இலங்கையின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2015 இல் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2020 இல் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தில் 9.3மூ ஆகும்,' என அவர் குறிப்பிட்டார்.
'தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயன்முறை வெளிச்சேவைபெறல் துறையானது கடந்த பத்து ஆண்டுகளில் 120,000 நிபுணர்களை பணியமர்த்தி கணிசமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அது இலங்கையின் முதல் பெரிய அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் நிறுவனமாக மாறியுள்ளதாகவும்' அவர் மேலும் குறிப்பிட்டார். 'இலங்கையின் திறமைக் குழுவை ஜேர்மன் வணிக உரிமையாளர்களுடன் இணைக்கும் நோக்கில் துணைத் தூதரகம் இந்த வலையமைப்பை ஆரம்பித்தது' என அவர் மேலும் குறிப்பிட்டார். இது சம்பந்தமாக, இலங்கைக்கு வருகை தரும் ஜேர்மன் தூதுக்குழுவை அழைப்பதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயன்முறை வெளிச்சேவைபெறல் சேவைகளில் எமது ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடவும் துணைத்தூதுவர் முன்மொழிந்தார்.
பிராங்பேர்ட் ரைன் மெயின் ஜி.எம்.பி.எச். இன் பணிப்பாளர் கலாநிதி கஸ்தூரி தாதே தனது விளக்கக்காட்சியில், 'சர்வதேச சந்தைகள், குறிப்பாக கிரேட்டர் பிராங்பேர்ட் பிராந்தியம் அதன் துடிப்பான சர்வதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் பின்டெக் நிலப்பரப்பு ஆகியவற்றுடன் வெளிப்படுவது இலங்கையின் வணிகங்களை மேம்படுத்துவதோடு ஜேர்மனியில் மட்டுமல்லாது ஐரோப்பாவிலும் அவர்களின் பார்வையை அதிகரிக்கும்' எனக் குறிப்பிட்டார்.
41 பில்லியன் யூரோக்கள் வருடாந்த விற்பனையுடன், தகவல் தொழில்நுட்பம் என்பது ஹெசென் கூட்டாட்சி மாநிலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்பத் துறையாவதுடன், தோராயமாக 11,000 தகவல் தொழில்நுட்ப வணிகங்களில் 126,000 பேர் பணி புரிகின்றனர். ஃபிராங்க்ஃபர்ட் சிறந்த இணைப்புடன் கூடிய உலகளாவிய டிஜிட்டல் மையமாக இருப்பதுடன், இணையப் பரிமாற்றங்களின் உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒன்றாகும்.
மெயின்ஸ்டேஜ் ஹப் இன் தலைமை நிறைவேற்று அதிகாரியும் நிறுவுனருமான ஸ்வென் வெக்னர், இந்த முயற்சியுடன் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்ததுடன், 'இதற்கு முன்னர் பல இலங்கை தொடக்க நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றியுள்ளோம், அவர்களின் பலம் அவர்களின் தொழில்நுட்ப அறிவு ஆகும். மேலும் இந்தத் தளம் நன்கு ஆராயப்பட்ட இந்த தொடக்க நிறுவனங்களுக்கு உண்மையிலேயே அளவிடுவதற்கும், அபிவிருத்திக்கும் உதவ முடியும்' எனக் குறிப்பிட்டார்.
அர்பன் மற்றும் சென்ஸ்மேட் ஆகியன இரண்டு இலங்கை நிறுவனங்களாவதுடன், அவை பிராங்பேர்ட் ரைன் மெயினுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன. மேலும், ஈ.சி. ஹோல்டிங்ஸ், அரிமாக் லங்கா, மெக்ஸோல் ப்ரோ, கப்பேஜ் எப்ஸ், பொடென்சா பிரைவேட் லிமிடெட் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏனைய நிறுவனங்கள் இந்த உரையாடலில் தீவிரமாக பங்களிப்புச் செய்துள்ளன.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் வஜிர குலாரத்ன நன்றியுரையை வழங்கினார். இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் உட்பட, முதன்மைக் குழு மற்றும் இலங்கை தொடக்க நிறுவனங்களுடன் ஒரு பௌதீக ரீதியான அமர்வுக்கு வசதி செய்ய ஏற்றுமதி அபிவிருத்தி சபை எதிர்பார்ப்பதாக அவர் நிறைவு செய்தார்.
இந்த முன்முயற்சியானது பிராங்பேர்ட் ரைன் மெயின் பிராந்தியத்துடனான இலங்கையின் ஈடுபாட்டின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிப்பதுடன், நீண்ட கால உறவின் முதல் படியாகும். இது இலங்கை தொடக்க நிறுவனங்களை பிராங்பேர்ட் ரைன்-மெயின் பிராந்தியத்தில் ஆராய்வதற்கும், அவற்றின் தீர்வுகளை விரிவுபடுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்குமான பல ஒத்த உரையாடல்களை உள்ளடக்கும். இலங்கையின் அபிவிருத்தியடைந்துவரும் உலகளாவிய தொடக்க நிறுவன சுற்றுச்சூழல் அமைப்புக்களில் புதிய தகவல் தொழில்நுட்பப் போக்குகள் குறித்து அறிந்து கொள்வதற்கு இது ஒரு ஊக்கியாக அமையும்.
இலங்கையின் துணைத் தூதரகம்,
பிராங்க்ஃபர்ட் ஆம் மெயின், ஜேர்மனி
2021 நவம்பர் 12