பலஸ்தீன அரசின் சுகாதார அமைச்சர் கலாநிதி. மை அல்-கைலாவுடன் பலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி சந்திப்பு 

பலஸ்தீன அரசின் சுகாதார அமைச்சர் கலாநிதி. மை அல்-கைலாவுடன் பலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி சந்திப்பு 

பலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி நாவலகே பென்னட் குரே அவர்கள் 2022 ஜனவரி 20ஆந் தி கதி  ரமல்லாவில் பலஸ்தீன அரசின் சுகாதார அமைச்சரைச் சந்தித்து இலங்கை மற்றும் பலஸ்தீன த்தின் கோவிட்-19 நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார். கலாநிதி. மை அல்-

கைலா பலஸ்தீனத்தில் இடம்பெறும் தடுப்பூசித் திட்டத்தை விளக்கியதுடன்,  இரண்டு  டோஸ் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் ஷொட்களைப் பெற்ற பலஸ்தீனிய மக்களின் உண்மைகள் மற்றும் புள்ளிவி வரங்களை வழங்கினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு மற்றும் அனைத்து சர்வதேச மன்றங்களிலும் பலஸ்தீனத்திற்கு இலங்கை அளித்து வரும் ஆதரவு குறித்து பிரதிநிதி குரே குறிப்பிடடார். இலங்கையில் 85மூ க்கும் அதிகமானோர் இரட்டைத் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து பலஸ்தீனியர்களுக்கும் குறிப்பாக தொற்றுநோயால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சிறந்த  வாழ்க்கையை வழங்குவதற்கு பலஸ்தீனிய அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். இரு நாடுகளின் சுகாதார அமைச்சுகளுக்கிடையில் மருந்துகளின் சாத்தியமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் மூலம் நன்மை பயக்கும் ஒரு வலுவான இணைப்பை உருவாக்குவதற்கு பிரதிநிதி குரே பரிந்துரைத்தார்.

பலஸ்தீனத்திற்கும் அதன் மக்களுக்கும் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வரும் ஆதரவிற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவிப்பதன் மூலம் கலாநிதி. மை அல் கைலாஹ் சந்திப்பை நிறைவு செய்தார்.

இலங்கையின் பிரதிநிதி அலுவலகம்,

ரமல்லாஹ்

2022 ஜனவரி 28

Please follow and like us:

Close