பங்களாதேஷ் வெளிநாட்டு சேவை அகடமியின் பிரதிநிதிகள் வெளிநாட்டு அமைச்சிற்கு விஜயம்

 பங்களாதேஷ் வெளிநாட்டு சேவை அகடமியின் பிரதிநிதிகள் வெளிநாட்டு அமைச்சிற்கு விஜயம்

தமது ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, பங்களாதேஷ் வெளிநாட்டு சேவை அகடமியின் பிரதிநிதிகள் குழு 2021 ஜனவரி 21ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சிற்கு விஜயம் செய்தது. பங்களாதேஷ் வெளிநாட்டு சேவை அகடமியின் பணிப்பாளர் திருமதி. ஃபர்ஹானா அஹமத் சௌத்ரி மற்றும் டாக்காவில் உள்ள வெளிநாட்டு சேவை அகடமியில் பயிற்சி பெற்று வரும் 16 வெளிநாட்டு சேவை அதிகாரிகள் இந்த பிரதிநிகள் குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.  பங்களாதேஷின் தற்காலிக உயர்ஸ்தானிகர் திரு. மொஹமட் ரெயாட் ஹொசைனும் தூதுக்குழுவுடன் இணைந்திருந்தார்.

தூதுக்குழுவினரை வரவேற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, பங்களாதேஷ் - இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் 'இலங்கையின் வெளியுறவுக் கொள்கையின் எதிர்காலம் மற்றும் நிகழ்கால சவால்கள்' குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இலங்கைக்கான உறுதியான ஆதரவிற்காக பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு வெளியுறவுச் செயலாளர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். 'இலங்கை வெளிநாட்டு அமைச்சு, வெளிநாட்டு சேவை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை குறித்த அறிமுகம்' என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் மற்றும் அமைச்சின் பல்தரப்பு விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் திரு. மெக்ஸ்வெல் கீகல் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.  பங்களாதேஷ் வெளிநாட்டு சேவையின் இளம் தூதுவர்களுக்கு பிராந்திய வெளிப்பாட்டை வழங்குவதற்கும், இரு நாடுகளினதும் வெளிநாட்டுச் சேவைகளுக்கு இடையே நெருக்கமான தொடர்புகளை வளர்ப்பதற்கும் உதவுவதாக இந்த ஆய்வுப் பயணம் அமைந்திருந்தது.

தமது ஆய்வுப் பயணத்தின் போது, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திரப் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ள தூதுக்குழுவினர், கொழும்புத் திட்ட செயலகம், தேசிய வர்த்தக சபை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும்  வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 ஜனவரி 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close