பகிரப்பட்ட தொடர்புகள் மற்றும் அபிலாஷைகளில் ஒத்துழைப்பை வளர்த்தல்: கொழும்பு ரோட்டரி கழகம் - ரீகனெக்ஷன்ஸ் மற்றும் மகதி ரோட்டரி கழகம் - நண்பர்கள் வட்டம் ஆகியவற்றுக்கு இடையே தகவல் தொழில்நுட்ப கல்வி புலமைப்பரிசில் திட்டத்தில் சகோதரக் கழக ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு

பகிரப்பட்ட தொடர்புகள் மற்றும் அபிலாஷைகளில் ஒத்துழைப்பை வளர்த்தல்: கொழும்பு ரோட்டரி கழகம் – ரீகனெக்ஷன்ஸ் மற்றும் மகதி ரோட்டரி கழகம் – நண்பர்கள் வட்டம் ஆகியவற்றுக்கு இடையே தகவல் தொழில்நுட்ப கல்வி புலமைப்பரிசில் திட்டத்தில் சகோதரக் கழக ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு

மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம், கொழும்பு ரோட்டரி கழகம் - ரீகனெக்ஷன்ஸ் மற்றும் மகதி ரோட்டரி கழகம்- நண்பர்கள் வட்டம் ஆகியவற்றுக்கு இடையே 2022 ஜூன் 29ஆந் திகதி சகோதரக் கழக ஒப்பந்தத்தில் மெய்நிகர் ரீதியாக கைச்சாத்திட உதவியது. 500 இலங்கைப் பயனாளிகளுக்கு இணையவழிச் சான்றிதழ் கற்கைகள், டிப்ளோமாக்கள் மற்றும் பட்டப் படிப்புக்களை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கட்டமைப்பை முறையாக நிறுவிய விழாவின் போது சர்வதேச கல்வி குளோபல் கல்லூரிகள் இன்க் மையம் கைச்சாத்திட்டது.

தனது ஆரம்ப உரையில், பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, இரு ரோட்டரி கழகங்களுக்கும் பரஸ்பர ஆலோசனைகளின் அடிப்படையில் கூட்டுத் திட்டங்களின் மூலம் தமது தொடர்புகளை விரிவுபடுத்தும் பரஸ்பர இலக்கின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எய்துவதற்காக தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். கூட்டாண்மை குறித்து பேசுகையில், ஐ.சி.டி.-பி.பி.எம். தொழிற்துறையின் தற்போதைய போக்குகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நாட்டின் இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஆற்றுவதற்கு பங்களிக்கும் நன்மைகளை அவர் எடுத்துரைத்தார்.

தகவல் தொழில்நுட்ப கல்வி புலமைப்பரிசில் திட்டத்தை இலங்கைக்கு விரிவுபடுத்தியதற்காக, மகதி ரோட்டரி கழகம் - நண்பர்கள் வட்டத்தின் பட்டயத் தலைவர் மற்றும் சி.ஐ.இ. இன் தலைவர் ஃ தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் நெலியா குரூஸ் சர்கோல் ஆகியோருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த முயற்சியை முன்னெடுப்பதில் தமது பங்களிப்புக்களை நல்கியமைக்காக, கொழும்பு ரோட்டரி கழகம் - ரீகனெக்ஷன்ஸ் அதிகாரிகளுக்கும், கொழும்பு ரோட்டரி கழகம் - ரீகனெக்ஷன்ஸின் தலைவர் ரகித ஜயதுங்க, முன்னாள் தலைவரும் பொது வடிவத் தலைவருமான ரோஹந்த அத்துகோரல மற்றும் ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3220 - இலங்கை மற்றும் மாலைதீவு மாவட்ட ஆளுநர் புபுது டி சொய்சா ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இரு ரோட்டரி கழகங்களும் எதிர்காலத்தில் பரிமாற்ற விஜயங்கள் மற்றும் ஏனைய ஈடுபாடுகள் மூலம் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு தமது உறுதிப்பாட்டைத் தெரிவித்தன.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2022 ஜூலை 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close