நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ புது டெல்லிக்கான விஜயத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ புது டெல்லிக்கான விஜயத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி

இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனின் அழைப்பின் பேரில், இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச 2021 டிசம்பர் 01 - 02 வரை புது டெல்லிக்கு மேற்கொண்டிருந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இது நிதி  அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட அவரது முதலாவது வெளிநாட்டு விஜயமாகும்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருடன் அமைச்சர் ராஜபக்ச இரண்டு சுற்று கூட்டுக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அமைச்சர் ராஜபக்ச வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாக இருதரப்புக் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரி மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார் தோவல் ஆகியோரையும் அவர் மேலும் சந்தித்தார்.

இந்தியப் பிரமுகர்களுடனான தனது சந்திப்பின் போது, தனக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் வழங்கிய விருந்தோம்பல் மற்றும்  தனது விஜயத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளுக்காக அமைச்சர் ராஜபக்ச இந்தியாவுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.  பல ஆண்டுகளாக பல துறைகளில் இலங்கையை இந்தியா நல்கி வரும் நீடித்த ஆதரவுக்காக அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கியோருடனான இலங்கை நிதியமைச்சரின் கலந்துரையாடல்கள், இருதரப்பு உறவுகள் தொடர்பான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த விடயங்களில் குறிப்பாக கவனம் செலுத்தியது. இருதரப்பு உறவின் வளர்ச்சிப் பாதை குறித்து இரு தரப்பினரும் தமது திருப்தியை வெளியிட்டனர். இந்தக்  கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள இருதரப்பு பொருளாதார உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்குமான வழிகள் மற்றும் வழிமுறைகளை அவர்கள் அடையாளம் கண்டனர்.

நிதியமைச்சர் ராஜபக்ச, இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் கோவிட்டுக்குப் பிந்தைய சவால்களை எதிர்கொள்வதற்கான  தனது அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து இந்தியத் தரப்புக்கு விளக்கினார். இத்தருணத்தில் இலங்கையுடனான இந்தியாவின் ஒற்றுமையை இந்திய அமைச்சர்கள் வெளிப்படுத்தினர். இந்தியா எப்பொழுதும் இலங்கைக்கு ஆதரவாக நிற்பதுடன், தற்போதைய சூழ்நிலையில் அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையால் இலங்கை சார்ந்த விடயங்கள் வழிநடாத்தப்படும் என அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக குறுகிய மற்றும் நடுத்தரக் கால ஒத்துழைப்பிற்கான நான்கு தூண்கள் குறித்து இரு தரப்பினரும்  கலந்துரையாடினர்:

i)    இந்தியாவில்இருந்து இலங்கைக்கு உணவு, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதை ஈடுசெய்யும் முகமாக, கடன் வரி நீடிப்பைக் கருத்தில் கொண்டு அவசர அடிப்படையில் உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் தொகுப்பை  வழங்குதல்.

ii)   இந்தியாவில்இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடன் வரி மற்றும் திருகோணமலை தொட்டிப் பண்ணையின்  ஆரம்பகால நவீனமயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய சக்திப் பாதுகாப்புத் தொகுப்பை வழங்குதல்.

iii)   தற்போதைய நிலுவைத் தொகைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இலங்கைக்கு உதவுவதற்காக நாணயப் பரிமாற்றத்தின்   சலுகையை வழங்குதல்.

iv)  வளர்ச்சிமற்றும் வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவதற்குப் பங்களிக்கின்ற இலங்கையில் உள்ள பல்வேறு துறைகளில் இந்திய  முதலீடுகளை எளிதாக்குதல். இது அந்த வகையில் சமீபத்தியப் போக்குகளை உருவாக்கும்.

பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட கால எல்லைக்குள், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் முன்கூட்டியே இறுதி  செய்யப்படும் என இதன்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. அமைச்சர் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர், மேற்கூறிய முயற்சியை ஒருங்கிணைக்கும் வகையில், நேரடியான தகவல்தொடர்பாடல் வழிகளைத் திறப்பதற்கும், நேரடியாகவும், வழக்கமான வகையிலும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது டெல்லி

2021 டிசம்பர் 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close