'தொடக்க நட்பு தேசத்தை நோக்கி இலங்கை' - பேர்லினில் இடம்பெற்ற 2021 ஆசியா பேர்லின் உச்சி மாநாட்டில் இலங்கைத் தூதரகம்

‘தொடக்க நட்பு தேசத்தை நோக்கி இலங்கை’ – பேர்லினில் இடம்பெற்ற 2021 ஆசியா பேர்லின் உச்சி மாநாட்டில் இலங்கைத் தூதரகம்

என்பெக்ட் ஜேர்மனி, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஹாட்ச் ஆகியவற்றுடன்  இணைந்து ஜேர்மனி, பேர்லினில் நடைபெற்ற ஆசியா பேர்லின் உச்சி மாநாடு 2021 இல் 'தொடக்க நட்பு தேசத்தை நோக்கி இலங்கை' என்ற தொனிப்பொருளின் கீழ் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தது.

பேர்லின் அமைச்சரவைத் திணைக்களத்தால் இயக்கப்படும் ஆசியா பேர்லின், ஆசியா மற்றும் பேர்லின் முழுவதும் ஆரம்ப சுற்றுச்சூழல் அமைப்புக்களுக்குள் சமூகங்களை ஒன்றிணைக்கும் கூட்டான தளமொன்றை உருவாக்குகின்றது. ஆண்டுதோறும் ஆசியா பேர்லின் செயற்பாடுகளுடன் நடாத்தப்படும் ஆசியா பேர்லினின் முக்கிய நிகழ்வான 'ஆசியா பேர்லின் உச்சி மாநாடு', கொள்கை வகுப்பாளர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் புதிய தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் ஆசியாவிற்கும் பேர்லினுக்கும் இடையிலான  ல்லை தாண்டிய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்கான தளம் ஆகும்.

இலங்கையின் வேலைத்திட்டத்தின் மூன்று பிரிவுகளில், ஜேர்மனிக்கான இலங்கையின் தொடக்க நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மென்மையான நிறுவல் போட்டி, டிஜிட்டல் நோமெட் தூதுவர் திட்டம் - #NOMAD4LK மற்றும் சமூக தொழில்முனைவோர் கூட்டம் ஆகியவை உள்ளடங்கும்.

தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிபுணத்துவம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் டிஜிட்டல் நோமெட்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு, டிஜிட்டல் நோமெட் தூதுவர் திட்டம் - #NOMAD4LK, ஒரு போட்டி வடிவத்தில் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் நோமெட் தூதுவர் திட்டத்தின் கீழ் வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்காக சிரேஷ்ட நீதிபதிகள் குழுவால் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. தூதரக தினத்தின் போது, திரு. மாட் டி காசின் டிஜிட்டல் நோமெட் தூதுவராக அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு இலங்கையின் ஹோட்டல் சங்கம் மற்றும் இலங்கை உள்வரும் பயண இயக்குனர்கள் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையின் கீழ் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், இணை இடங்கள், தடையற்ற இணைப்பு மற்றும் 12 வாரங்களுக்கான தங்குமிட வசதி மற்றும் மீளத் திரும்பும் விமான டிக்கெட் உட்பட பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கான முழுமையான தொகுப்பொன்றும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தால் அனுசரணையளிக்கப்பட்ட இலங்கையில் தொடங்கப்பட்ட புதிய தொழில் முனைவோர் வீசாவின் கீழான இலங்கையில் தங்குவதற்கான முழுமையான வீசா ஆகியன வழங்கப்பட்டன. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் டிஜிட்டல் நோமெட் தூதுவர் இலங்கையின் தொடக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும், இலங்கையிலான தனது அனுபவத்தை ஏனைய சாத்தியமான டிஜிட்டல் நோமெட்டுக்கள் மற்றும் தொடக்கக் குழுக்களிடையே விளம்பரப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பேர்லின் மற்றும் ஜேர்மனியில் வளர்ந்து வரும் தொடக்க சமூகங்களுக்கு உறுதியான நன்மைகளைக் கொண்டுவருவதற்காக, புதுமை மற்றும் தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு என்பெக்ட் தயாராக உள்ளதாக ஜேர்மனியின் என்பெக்ட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஜான் லெச்சன்மேயர் வலியுறுத்தினார்.

விருந்தினர்கள் மத்தியில் உரையாற்றிய ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே, ஐரோப்பாவின் தொடக்கத் தலைநகரான பேர்லினுக்கு இடையே ஒரு வலுவான பாலத்தை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் 2021 இல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் எம்பெக்ட்டுக்குமிடையிலான ஒத்துழைப்பைப் பாராட்டினார். இலங்கையின் தொடக்க நிறுவனங்கள் ஜேர்மன் சந்தையில் நுழைவதற்கான ஆதரவு மற்றும் தொழில்நுட்பத் துறையில் இலங்கையின் திறனை ஆராய்வதற்கான ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என்பதை அவர் மேலும் வலியுறுத்தினார்.

தனது உரையின் போது, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் திரு. ஓஷத சேனநாயக்க, இலங்கையிடம் பெரும் ஆற்றலும் புதுமையான தொடக்கக் கலாச்சாரமும் இருப்பதாகவும், மென்மையான போட்டியானது இலங்கையின் தொடக்க நிறுவனங்களை ஜேர்மனிக்கு தொடங்குவதற்கான சிறந்த வாய்ப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

ஆசியா பேர்லின் தூதுவர் திரு. அரவிந்த் பஞ்ச் அவர்களால் நிர்வகிக்கப்படும் சமூகத் தொழில்முனைவோர் மாநாடானது, இலங்கையின் சமூகக் கண்டுபிடிப்பின் பங்களிப்பையும், அத்தகைய கண்டுபிடிப்புக்களின் சாத்தியக்கூறுகளை உலகளவில் நிரூபிக்கப்பட்ட ட்ரீம்ஸ்பேஸ் அகடமி, க்ரீன் எனர்ஜி சம்பியன், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம், ஏஜிடெக் இன்னோவேஷன் மற்றும் குட் லைப் ஓ ஆகியவற்றின் வழக்கு ஆய்வுகளுடன் தொடர்புடையதாகக் காட்டியது.

இந்தக் கலப்பு நிகழ்வில் சுமார் 60 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதுடன், வெற்றிகரமான முன்னெடுப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அது பாராட்டப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

பேர்லின்

2021 அக்டோபர் 12

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close