தெஹ்ரானில் உள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய மையத்தின் ஆலோசனைக் குழுவின் 11வது கூட்டத்தில் இலங்கை பங்கேற்று, ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலான அதன் ஆர்வத்தை எடுத்துக்காட்டல்

தெஹ்ரானில் உள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய மையத்தின் ஆலோசனைக் குழுவின் 11வது கூட்டத்தில் இலங்கை பங்கேற்று, ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலான அதன் ஆர்வத்தை எடுத்துக்காட்டல்

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய மையத்தின் ஆலோசனைக் குழுவின் 11வது கூட்டம் 2022 அக்டோபர் 23ஆந் திகதி ஈரானின் தெஹ்ரானில் கூட்டப்பட்டதுடன், இதற்கு முன்னதாக 'ஈரான் மற்றும் இந்து சமுத்திர விளிம்புக்கூட்டமைப்பு: வாய்ப்புக்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்' என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் பொருளாதார இராஜதந்திரத்திற்கான வெளிவிவகார துணை அமைச்சர் கலாநிதி. மஹ்தி சஃபாரி, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயலாளர் ஜெனரல் சல்மான் அல் ஃபரிசி, ஈரானில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ப்ரீஸ்னர், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளின் தூதரகப் பணிகளுக்கான பிரதிநிதிகள் மற்றும் ஈரான் அரசாங்கத்தின் உரையாடல்  கூட்டாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பங்களாதேஷ் தூதுவர் கௌசல் ஆசம் சர்க்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார துணை அமைச்சர் கலாநிதி மஹ்தி சஃபாரி, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் சல்மான் அல் ஃபரிசி மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் பணிப்பாளர் கரேத் ரீஸ் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப இடமாற்றத்திற்கான பிராந்திய மையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். சஞ்சாபி ஒரு விளக்கக்காட்சியை வழங்கியதுடன், அதில் அவர் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப இடமாற்றத்திற்கான பிராந்திய மையத்தின் செயற்றிறன், 2022-2023  ஆம் ஆண்டிற்கான மையத்தின் வருடாந்த வேலைத் திட்டம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தமது தேசிய நிலைப்பாட்டில் தலையிட்டமைக்கான பிரதிபலிப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்திற்கு தனது நாட்டின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்திய தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு, சங்கத்தின் கட்டமைப்பிற்குள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான பிராந்திய மையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தை வலியுறுத்தினார்.

நிகழ்வுகளின் பக்க அம்சமாக, ஈரான் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சஃபாரி, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயலாளர் நாயகம் அல் ஃபரிசி மற்றும் ஈரான் வர்த்தக சம்மேளனம், கைத்தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் துணைத் தலைவர் அலிரேசா  யாவரி ஆகியோரை சந்தித்த இலங்கைத் தூதுவர், சுற்றுலா, தொழில்நுட்பங்கள், கலாச்சாரம், பேரிடர் முகாமைத்துவம், நீலப் பசுமைப் பொருளாதாரம் மற்றும் மீன்வள முகாமைத்துவம் ஆகிய துறைகளில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடினார். நவம்பர் 2022 இல் டாக்காவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த விடயங்களில் மேலதிக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, இந்து சமுத்திர  விளிம்பு சங்கச் செயலகத்தின் ஒருங்கிணைப்புடன், இந்து சமுத்திர விளிம்பு சங்க நிகழ்வுகள் ஈரான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டன.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2022 அக்டோபர் 25

Please follow and like us:

Close