தென்னாபிரிக்க சந்தையில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் ஆடைத் தொழில்களுக்கான புதிய வாய்ப்புகளை உயர்ஸ்தானிகர் அமரசேகர தேடல்

தென்னாபிரிக்க சந்தையில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் ஆடைத் தொழில்களுக்கான புதிய வாய்ப்புகளை உயர்ஸ்தானிகர் அமரசேகர தேடல்

தென்னாபிரிக்காவில் கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆடைத் துறைகள் போன்ற துறைகளில் ஆபிரிக்க சந்தையில் இலங்கைத் தொழில்களுக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிரிட்டோரியாவிற்கும் அங்கீகாரம் பெற்ற நமீபியா மற்றும் எஸ்வடினி ஆகிய நாடுகளின் தூதுரகத் தலைவர்களுடனான மெய்நிகர் சந்திப்புக்களை பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் ஏற்பாடு செய்தது. அந்த வகையில், தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எஸ். அமரசேகர, தென்னாபிரிக்காவிற்கான நமீபிய உயர்ஸ்தானிகர் வெய்க்கோ கே. நிகிவெட்டே மற்றும் தென்னாபிரிக்காவிற்கான எஸ்வடினி இராச்சியத்திற்கான பதில் தூதரகத் தலைவர் வுலிண்ட்லெலா எஸ். குனேன் ஆகியோர் மெய்நிகர் சந்திப்புக்களில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்புக்களில், கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகள் மற்றும் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் ஆடைத்துறை ஆகியவற்றில் வளர்ந்து வரும் தனியார் துறை நிறுவனங்களின் ஆபிரிக்க சந்தைகள் மீதான கவனத்தை உயர்ஸ்தானிகர் அமரசேகர விளக்கினார்.

தமது பரதிபலிப்புக்களில், நமீபியா மற்றும் எஸ்வடினி ஆகியவற்றின் தூதரகத் தலைவர்கள் தமது நாடுகளில் உள்ள வாய்ப்புக்களை விளக்கி, வெற்றிகரமான இலங்கை வணிகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டதுடன், அந்தந்த நாடுகளில் இலங்கையர்களுக்கான புதிய வணிக வழிகளைக் கண்டறிவதற்கான அவர்களது ஆதரவை உறுதி செய்தனர். மேலும், இரு தரப்பினரும் வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை தலைநகரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளவும், வருங்கால வணிக் கூட்டாளர்களுக்காக சில வியாபார சந்திப்புக்களை ஏற்பாடு செய்யவும் ஒப்புக்கொண்டனர்.

உயர்ஸ்தானிகராலயம்,

பிரிட்டோரியா

2021 செப்டம்பர் 22

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close