திருவனந்தபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவ தூதுவர் நியமனக் ஆவணத்தைப் பெற்றுக் கொண்டார்

திருவனந்தபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவ தூதுவர் நியமனக் ஆவணத்தைப் பெற்றுக் கொண்டார்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் கௌரவ தூதுவர் பிஜுமோன் கர்ணன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடமிருந்து தனது நியமன ஆவணத்தை இன்று (03) புதுடெல்லியில் பெற்றுக்கொண்டார். இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் எளிமையான முறையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கையொப்பமிட்ட நியமன ஆவணம், உயர்ஸ்தானிகரால் திரு. கர்ணனிடம் கையளிக்கப்பட்டது. 

 

பிரபல எழுத்தாளரும், திருவனந்தபுரத்துக்கான மக்களவை உறுப்பினருமான கலாநிதி சசி தரூர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட இராஜதந்திர ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

திருவனந்தபுரத்தில் உள்ள இலங்கையின் கௌரவ தூதுவரின் நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை 2021 அக்டோபர் 13ஆந் திகதி இந்திய அரசாங்கம் வெளியிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள இலங்கையின் கௌரவ தூதுவரின் பதவிக்காலம் முன்னாள் கௌரவ தூதுவரின் மறைவுடன் 2018 அக்டோபர் முதல் வெற்றிடமாக உள்ளது.

 

கேரளாவின் முன்னணி வர்த்தகரான கௌரவ கெயரவ தூதுவர் பிஜுமோன் கர்ணன், ஈ.என்.பி.சி. பரிஸ் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டத்தையும், கர்நாடக மாநில பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டத்தையும் பெற்றவராவார்.

 

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது டில்லி

 

2021 நவம்பர் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close