இலங்கையின் துணைத் தூதரகம் 36 எக்லின்டன் அவென்யூ வெஸ்ட், டொராண்டோ, M4R 1A1 எனும் முகவரியிலிருந்து 01 எக்லின்டன் ஏவ் ஈஸ்ட், டொராண்டோ, M4P 3AI எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. புலம்பெயர் இலங்கையர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, கோரப்பட்ட இந்த மாற்றத்தின் வாயிலாக புதிய இடமானது முன்மொழியப்பட்ட பல தேவைகளை எளிதாக்குகின்றது. தற்போது எக்லின்டன் சுரங்கப்பாதை நிலையத்திற்கு எதிரே வசதியாக அமைந்துள்ள இந்தப் புதிய இடத்தினை அணுகிக் கொள்வது மிகவும் இலகுவானதாகும். துணைத் தூதரகத்தின் சேவைகள் தேவைப்படும் எந்தவொரு நபரும் டி.டி.சி. சேவைப் பாதையை விட்டு வெளியேறாமல் தற்போது இந்தப் புதிய இடத்திற்கு வருகை தர முடியும் என்பதுடன், கடுமையான குளிர்கால மாதங்களில் பாதிப்புக்கள் வெகுவாகக் குறைந்த நிலையில் இருக்கும். மேலும், மிகவும் விசாலமான மற்றும் வசதியான அமைப்பில் ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வகையில் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாய் போன்ற பிரதான இனக்குழுக்களின் பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டாடும் வழமையான திறப்பு விழாவுடன், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 01ஆந் திகதி இலங்கையின் துணைத் தூதரகம் பொது மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக முறையாக மீண்டும் திறக்கப்பட்டது. இதன் விளைவாக, டொராண்டோவில் வசிக்கும் இந்த சமூகங்களைச் சேர்ந்த பலர் அடையாள ஒற்றுமையுடன் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
ஒன்று கூடியிருந்த அனைவரையும் நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன அன்புடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் வணிகக் கொன்சல் சந்திம கிரிவந்தலவினால் வாசிக்கப்பட்டது. டொராண்டோவில் உள்ள இலங்கை சமூகத்தின் சார்பாக, கபில ஜயவீர தனது உரையில், புதிய இடத்தினால் வழங்கப்படும் பல நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். துணைத் தூதரகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றும் சமூகத்தின் முக்கிய உறுப்பினரான குல செல்லத்துரை, துணைத் தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளின் எதிர்காலப் பங்களிப்பு குறித்து நம்பிக்கையுடன் இந்த நடவடிக்கையை ஒரு விரிவான வெற்றியடையச் செய்தமைக்காக துணைத் தூதுவ் கபில ஜயவீர மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.
பாரம்பரிய பால் சோறு, மசாலா தேநீர், இனிப்பு இறைச்சிகள் மற்றும் ஏனைய பாரம்பரிய உணவு வகைகளுடன் இந் நகழ்வில் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்திருந்தது. இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அனைத்து அம்சங்களின் உணர்வுகளையும் சிறப்பித்துக் காட்டும் புதிய சூழலை கலந்துகொண்ட பலர் பாராட்டினர்.
இலங்கையின் துணைத் தூதரகம்,
டொராண்டோ
2021 டிசம்பர் 06