அவுஸ்திரியாவின் டைரோல் நிர்வாகப் பகுதியில் இலங்கையின் புதிய துணைத் தூதுவராக கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பனை நியமனம் செய்யும் கடிதத்தை தூதுவர் மஜிந்த ஜயசிங்க நியமன கையளித்தார்.
கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பன் இன்ஸ்ப்ரூக் மற்றும் போலோக்னா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கலாநிதி ஸ்டெப்பன் போலோக்னா, பிராங்பேர்ட், இன்ஸ்ப்ரூக், பாவியா மற்றும் ட்ரையண்ட் பல்கலைக்கழகங்களில் உள்ள சர்வதேச பட்டதாரிப் பாடசாலையின் அறிஞராவார். தற்போது, இலங்கையில் வணிக அபிவிருத்தி நடவடிக்கைகளை நிர்வகிக்கும் டிமட் - ஈ.எல். மெடிக்கல் எலக்ட்ரோனிக்ஸில் கலாநிதி ஸ்டெப்பன் பணிபுரிகின்றார். அவர் ஜேர்மன், ஆங்கிலம், ரஷ்யன், இத்தாலியன் மற்றும் பிரஞ்சு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
விவசாயம் மற்றும் வனவியல் ஆகியவை டைரோலில் ஒரு விஷேட இடத்தைப் பிடித்துள்ளன. பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணைகள் பல நூற்றாண்டுகளாக டைரோலில் நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளன. டைரோலின் மிக முக்கியமான துறையாக மூன்றாம் நிலைத் துறை விளங்குகின்றது. இப்பகுதியில் சுற்றுலாத்துறைக்கு தனி இடம் உண்டு.
ஒஸ்ட்ரியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் ஹங்கேரியில் உள்ள சால்ஸ்பர்க்கில் புதிய துணைத் தூதுவர்களை நியமனம் செய்வதற்கு தூதரகம் எதிர்பார்க்கின்றது.
இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை
வியன்னா
2022 ஏப்ரல் 26