டிரவல் எக்ஸ்போ அங்காராவில் பார்வையாளர்களை இலங்கை ஈர்ப்பு

 டிரவல் எக்ஸ்போ அங்காராவில் பார்வையாளர்களை இலங்கை ஈர்ப்பு

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துடன் இணைந்து துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்,  2022 மார்ச் 03 முதல் 06 வரை நடைபெற்ற டிரவல் எக்ஸ்போ அங்காரா பயண வர்த்தககட கண்காட்சியின் 05வது பதிப்பில் பங்கேற்றது. அங்காராவை தளமாகக் கொண்ட முக்கிய பயண வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பது இது இரண்டாவது தடவையாகும்.

துருக்கிய மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் பயணக் கண்காட்சியில் இலங்கையின் கூடத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். பயண முகவர்கள், வெளியூர் சுற்றுலா நடத்துனர்கள், ஊடகங்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தர ஆர்வமுள்ள துருக்கியப் பயணிகளுக்கு இலங்கையில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்த விளக்கங்களை வழங்கும் வகையில் இலங்கையின் கூடம் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கைக் கூடத்தில் வழங்கப்பட்ட தூய சிலோன் தேநீரையும் பார்வையாளர்கள் சுவைத்து அனுபவித்தனர்.

இந்த ஆண்டு, இலங்கை உட்பட 25 நாடுகள், முக்கிய துருக்கிய பயண முகவர்கள், வெளிச்செல்லும் சுற்றுலா நடத்துனர்கள் மற்றும் பயண / சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பல அமைப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர். அங்காரா பிராந்தியத்தில் வசிக்கும் ஏராளமான துருக்கிய மற்றும் வெளிநாட்டு பயணிகள் டிரவல் எக்ஸ்போ 2022 ஐ பார்வையிட்டனர். இந்தக் கண்காட்சியை ஏ.டி.ஐ.எஸ். ஃபேர்ஸ் இன்க்., அங்காரா வணிக சபை, அங்காரா தொழில்துறை, அங்காரா மாநகர சபை மற்றும் துருக்கிய பயண முகவர்கள் சங்கம் ஏற்பாடு செய்தன.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 மார்ச் 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close