இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் 2022 பெப்ரவரி 04 ஆந் திகதி துணைத் தூதரக வளாகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்நிகழ்வு துணைத் தூதரகத்தின் ஊழியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது.
முதன்மைச் செயலாளர் திரு. எச்.பி.டி.என்.கே. ஜயசேகர அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் விழா ஆரம்பமானது.
தாய்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரம்பரிய மங்கள விளக்கேற்றப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு ஆசீ வேண்டி, பல சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.
அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரின் சுதந்திர தினச் செய்திகள் முறையே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வாசிக்கப்பட்டன.
ஊழியர்களுக்கு மத்தியில் உரையாற்றிய முதன்மைச் செயலாளர் திரு. ஜயசேகர, அதிமேதகு ஜனாதிபதியின் 'நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை' என்ற கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதுடன், இது எமது தொலைநோக்காகவும், மற்றும் துணைத் தூதரகத்தின் பணியாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மூன்றாம் செயலாளர் திரு. டி.டி.யு.எஸ். டங்கல்ல அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இலங்கையின் துணைத் தூதரகம்,
ஜெட்டா, சவுதி அரேபிய இராச்சியம்
2022 பிப்ரவரி 08