ஜித்தாவில் உள்ள வி.எப்.எஸ். நிலையத்தில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சாவடி

ஜித்தாவில் உள்ள வி.எப்.எஸ். நிலையத்தில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சாவடி

சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் மொஹிதீன் அம்சா அவர்கள் சவூதி அரேபிய இராச்சியத்தின் ஜித்தாவில் உள்ள வி.எப்.எஸ். விசா விண்ணப்ப நிலையத்தில் 2022 மார்ச் 01ஆந் திகதி இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சாவடியை திறந்து வைத்தார்.

இந்தச் சாவடி இரண்டு கவர்ச்சிகரமான தொகுதிகளைக் கொண்டிருந்ததுடன், அவற்றில் ஒன்று அழகான இலங்கை வனவிலங்குகளைக் காட்சிப்படுத்துகின்ற அதே வேளை மற்றொன்று இலங்கையின் மணல் நிறைந்த கடற்கரைகளைக் காட்சிப்படுத்துகின்றது. சுற்றுலா விளம்பர வீடியோக்களும் திரையிடப்பட்டன. இந்த விளம்பரச் சாவடியானது தமது விசா மற்றும் கடவுச்சீட்டுத் சேவைகளுக்காக வி.எப்.எஸ். நிலையத்திற்கு வருகை தருபவர்களுக்கு இலங்கை குறித்த பயனுள்ள பயணத் தகவல்களை வழங்கும்.

இலங்கை சுற்றுலாவிற்கு ஆதரவான சாவடியை ஏற்பாடு செய்தமைக்காக வி.எப்.எஸ். அலுவலகத்திற்கு தூதுவர் நன்றிகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் வி.எப்.எஸ். நிலையத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஹொசின் பாலெக், செயற்பாட்டு முகாமையாளர் பஸ்மில் காசிம்,  (வி.எப்.எஸ். நிலையம்), வி.எப்.எஸ். நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

2020 மற்றும் 2021க்கு இடையில், கோவிட்-19 உடன் தொடர்புடைய பாதகமான விளைவுகளின் காரணமாக 2019 உடன் ஒப்பிடும்போது சவுதி அரேபியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், கோவிட் தொடர்பான தடைகளை இலங்கை தளர்த்தியுள்ளதால், 2022இன் தொடக்கத்தில் இருந்து சாதகமான வளர்ச்சி காணப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்

2022 மார்ச் 09

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close