தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு பிரதி உயர்ஸ்தானிகராலயம் வழங்கும் சேவைகளின் விரிவாக்கமாக, சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூன் 28 ஆந் திகதி சான்சரி வளாகத்தில் விஷேட மருத்துவ முகாமொன்றை ஏற்பாடு செய்தது.
திருச்சி ஸ்டார் கிம்ஸ் சர்வதேச மருத்துவமனையின் வைத்தியர் ராஜரத்தினம் மற்றும் குழுவினர் இந்த மருத்துவ முகாமை நடாத்தினர். அனைத்து பங்கேற்பாளர்களும் தனித்தனியாக ஆலோசனை வழங்கப்பட்டு, அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
திருப்பூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், விருதுநகர், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 500 இலங்கையர்களைக் கொண்ட குழுவினருக்கு, விசேட கொன்சியூலர் முகாமிற்கு இணையாக இந்த விஷேட மருத்துவ முகாம் நடைபெற்றது. கொன்சியூலர் முகாமில், 483 குடியுரிமைச் சான்றிதழ்கள்,97 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் 5 அகதிகள் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கடவுச்சீட்டுக்களும் வழங்கப்பட்டன.
எதிர்காலத்தில் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஒவ்வொரு விசேட கொன்சியூலர் முகாமிற்கும் இணையாக மருத்துவ முகாமும் நடாத்தப்படும்.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர்
சென்னை
2022 ஜூலை 19