சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் என்பது சூரியனுக்கும், இயற்கை அன்னைக்கும், வளமான விளைச்சலுக்கு உதவுகின்ற பண்ணை விலங்குகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நான்கு நாள் திருவிழாவாகும். நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் அறுவடை செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இத் திருவிழா அனுஷ்டிக்கப்படுகின்றது.

'தைப் பொங்கல்' என அழைக்கப்படும் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள், இந்துக் கடவுளான 'சூர்யா' (சூரியனுக்கு) அர்ப்பணிக்கப்பட்டதாகும். சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலமும், செழிப்பு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதன் மூலமும் இது தென்னிந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம், தைப் பொங்கலை 2022 ஜனவரி 12ஆந் திகதி காலை சான்சரி வளாகத்தில் கொண்டாடியது. பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி. டி. வெங்கடேஷ்வரன் மற்றும் அவரது பாரியாரின் தலைமையில் அனைத்து மங்கள சம்பிரதாயங்களும் நடைபெற்றன. தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந் நிகழ்வில், தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 ஜனவரி 18

Please follow and like us:

Close