சூடானில் நிலைமை

சூடானில் நிலைமை

சூடான் குடியரசில் இடம்பெறுகின்ற விடயங்களின் அண்மைக்கால அபிவிருத்திகள் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது.

சூடான் குடியரசிற்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம் சூடானில் உருவாகி வரும் நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. கார்ட்டூம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளுடன் தூதரகம் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி  வருவதுடன், அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைளையும் வழங்கியுள்ளது.

தூதரகத்தை மின்னஞ்சல்: slcairoconsular@gmail.com மற்றும் தொலைபேசி இல: +201272813000  வாயிலாகவும், மற்றும் கார்ட்டூமில் உள்ள இலங்கையின் கௌரவ தூதுவர் திரு. சயீத் அப்தெல் அவர்களை தொலைபேசி  இல. +249912394035 வாயிலாகவும் அழைத்து உடனடியாக உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஏப்ரல் 21

Please follow and like us:

Close