சீன சர்வதேச இறக்குமதி எக்ஸ்போவில் இலங்கையின் கூடத்தை ஊக்குவிப்பதற்காக தூதுவர் கலாநிதி.  பாலித கொஹொன சீன ஊடகங்களுடன் சந்திப்பு

 சீன சர்வதேச இறக்குமதி எக்ஸ்போவில் இலங்கையின் கூடத்தை ஊக்குவிப்பதற்காக தூதுவர் கலாநிதி.  பாலித கொஹொன சீன ஊடகங்களுடன் சந்திப்பு

2021ஆம் ஆண்டு 4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பு குறித்து விளக்குவதற்காக, சீன ஊடகங்களை தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன தனது இல்லத்தில் வைத்து 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆந் திகதி சந்தித்தார். சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில், உணவு மற்றும் பானம் மற்றும் இரத்தினங்கள்  மற்றும் ஆபரணங்கள் போன்ற இரண்டு பிரிவுகளில் இலங்கை பங்கேற்கின்றது.

தனது உரையில்,4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியின் போது, பாரம்பரிய ஏற்றுமதிக்கும் மேலதிகமாக, இனிப்பு மிட்டாய் போன்ற சில புதிய தயாரிப்புக்களையும் சந்தையில் இலங்கை அறிமுகப்படுத்தவிருப்பதாக தூதுவர் கலாநிதி. கொஹொன குறிப்பிட்டார். இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காக, சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி ஒரு திறமையான தொடக்கத் தளத்தை வழங்கும் என இலங்கை நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். இன்று சீனா உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாகும்.

எக்ஸ்போவின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் பிரிவின் முக்கிய காட்சிப்பொருளாக அமையவிருக்கும்  இலங்கையின் நட்சத்திர சபையர் கிளஸ்டரை அவர் முன்னிலைப்படுத்தினார்.

4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்புக்கு அதிகபட்சமான விளம்பரத்தினை வழங்குவதற்காக சீன ஊடகங்களுக்கு தூதுவர் கலாநிதி. கொஹொன அழைப்பு விடுத்தார். எக்ஸ்போவில் இலங்கைத்  தயாரிப்புகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். நேரடி ஒளிபரப்பானது இன்று சீனாவில் மிகவும் பயனுள்ள சந்தைப்படுத்தல் கருவியாகும்.

முறையான நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்னர், இலங்கை சுற்றுலா, இலங்கைத் தேயிலை மற்றும் முதலீட்டு  வாய்ப்புக்கள் குறித்த வீடியோக்கள் திரையிடப்பட்டன.

25க்கும் மேற்பட்ட அச்சு மற்றும் மின்னணு ஊடக ஊழியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாபெரும்  கைசா பயணக் குழுவும் (சீனாவில் முதல் ஐந்து இடங்களில் ஒன்று) இதில் பங்குபற்றியது. பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகையில், ஒரு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதாக கைசா பயணக் குழு தூதுவருக்கு உறுதியளித்தது.

அனைத்து விருந்தினர்களுக்கும் இலங்கையின் விருந்து அளிக்கப்பட்டு, நிகழ்வு நிறைவு பெற்றது.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 அக்டோபர் 04

Please follow and like us:

Close