சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் மருத்துவ உபகரணங்களை நன்கொடை

சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் மருத்துவ உபகரணங்களை நன்கொடை

மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அனுப்புவதனை ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 ஜனவரி 20ஆந் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஆதரவுடன் ஒருங்கிணைத்தது.

சவூதி அரேபியாவில் வாழும் இலங்கை சமூகத்தின் நன்கொடைகளான இந்த உபகரணங்கள், தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில் ரியாத்தில் உள்ள இலங்கையின் கலாச்சார மன்றத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு வசதியளிக்கப்பட்டது. 1.2 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மினி ஒட்சிசன் செறிவூட்டிகளின் ஒன்பது அலகுகள் இந்த நன்கொடையில் உள்ளடங்கும்.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கையில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க உதவும் முகமாக, சரியான நேரத்தில் இந்த நன்கொடைகளை வழங்கியமைக்காக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கையின் கலாச்சார மன்றத்தை தூதரகம் பெரிதும் பாராட்டுகின்றது.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்

2022 ஜனவரி 27

Please follow and like us:

Close