மே 19ஆந் திகதி சவூதி எயார்லைன்ஸ் எஸ்.வி. 786 இன் மூலமாக இலங்கைக்கு நாடு திரும்பிய 103 நபர்களை உள்ளடக்கிய கடைசித் தொகுதியினருடன், ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ள தடுப்புக்காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
2021 ஏப்ரல் மாதத்தில் இலங்கைத் தூதரகம் தொடங்கிய நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகளின் கடைசிக் கட்டம் இதுவாகும். தற்போதைய புதிய கொத்தணிக்கு மத்தியில் 49 பெண்கள் மற்றும் 131 ஆண்கள் உள்ளடங்கலாக மொத்தம் 180 நபர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 2020 ஜூலை முதல், 334 நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர்.
நாடுகடத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரும் செயன்முறையானது, சவூதி அதிகாரிகளுக்கும் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜெத்தாவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாகும்.
இலங்கைத் தூதரகம் - ரியாத்
இலங்கை துணைத் தூதரகம் - ஜெத்தா
2021 மே 19