சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய போலியான NIKE  காலணிகளின் வீடியோ

சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய போலியான NIKE  காலணிகளின் வீடியோ

NIKE சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய ஒரு ஜோடி காலணிகளின் வீடியோ சமூக  வலைதளங்களில் பரவியமை இந்த அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வீடியோவில் சித்தரிக்கப்பட்ட காலணிகள் NIKE ஆல் தயாரிக்கப்படவில்லை என்பதை விசாரணையின்  போது NIKE, Inc.  உறுதிப்படுத்தியது.

புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறுவனத்தின்  நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான அமுலாக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என NIKE, Inc.  மேலும் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

31 ஜூலை 2021

Please follow and like us:

Close