குவைத்திலிருந்து 33 புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதற்கான வசதிகளை இலங்கைத் தூதரகம் மேற்கொண்டது

குவைத்திலிருந்து 33 புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதற்கான வசதிகளை இலங்கைத் தூதரகம் மேற்கொண்டது

PHOTO-2019-12-24-14-28-42_1

33 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2019 டிசம்பர் 23ஆந் திகதி குவைத்திலிருந்து இலங்கைக்கு நாடு திரும்புவதற்கான வசதிகளை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டது. பயண ஆவணங்களை வழங்குவதற்கும், தொழிலாளர்கள் இலங்கைக்கு நாடு திரும்புவதற்காக சம்பந்தப்பட்ட குவைத் அதிகாரிகளிடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கும் தூதரகம் ஏற்பாடுகளை மேற்கொண்டது.

தங்களது பணியிடங்களில் சிரமங்களை எதிர்கொண்ட இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் தேவையான நடைமுறைகள் நிறைவடையும் வரை, தூதரகத்தால் பராமரிக்கப்படும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்ட அதே வேளை, சிலர் தங்களுக்கு விருப்பமான பிற இடங்களில் தங்கியிருந்தனர்.

கிடைக்கக்கூடிய புள்ளிவிபரங்களின் பிரகாரம், குவைத்தில் சுமார் 100,000 புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் காணப்படுவதுடன், அவர்களில் பெரும்பாலானோர் வீட்டுப் பணிப்பெண்கள் ஆவர்.

இலங்கைத் தூதரகம்
குவைத்
24 டிசம்பர் 2019

PHOTO-2019-12-24-14-28-42

Please follow and like us:

Close