காசியான்டெப்பில் இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக  திறந்து வைப்பு

காசியான்டெப்பில் இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக  திறந்து வைப்பு

தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், காசியான்டெப்பை தளமாகக் கொண்ட பாராளுமன்ற  உறுப்பினர்கள், காசியான்டெப் ஆட்சியகத்தின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் காசியான்டெப் நகராட்சியின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 ஆகஸ்ட் 22ஆந் திகதி இலங்கையின் கௌரவ துணைத் தூதரகம், துருக்கியின் காசியான்டெப்பில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் துருக்கி ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் பல சாத்தியமான ஒத்துழைப்புத் துறைகள் இருப்பதால், வரலாறு முழுவதும் பல்வேறு நாகரிகங்களின் தாயகமான  காசியான்டெப் என்ற வரலாற்று நகரத்தில் உள்ள கௌரவ தூதரகம், காசியான்டெப் மக்கள், வணிக சமூகம் மற்றும் அதிகாரத்துவத்துடன் இருக்கும் உறவுகளை மேலும் மேம்படுத்தும் என தூதுவர் ஹாசன் தனது உரையில் தெரிவித்தார்.

காசியான்டெப் பிராந்தியத்தில் இலங்கையை ஊக்குவிப்பதற்கும் புதிய வர்த்தக வாய்ப்புக்கள்,  சுற்றுலா மற்றும் முதலீட்டை ஈர்ப்பதற்கும் தனது அர்ப்பணிப்பை உறுதியளித்த சுலைமான் சிசெக்கை காசியான்டெப்பின் கௌரவ தூதுவராக நியமிக்கும் ஆணையை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 ஆகஸ்ட் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close