ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை ஆகியன 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' மீதான நிகழ்வுக்கு தலைமை தாங்கின 27 - 29 ஏப்ரல் 2021, கொழும்பு

ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை ஆகியன ‘காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்’ மீதான நிகழ்வுக்கு தலைமை தாங்கின 27 – 29 ஏப்ரல் 2021, கொழும்பு

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் ஆகியன இந்த வாரம் 2021 ஏப்ரல் 27 - 29 வரை கொழும்பில் நடைபெற்ற 'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' என்ற மெய்நிகர் நிகழ்வுக்கு தலைமை தாங்கின.

இந்த முக்கியமான ஆண்டில் காலநிலை நடவடிக்கைகளுக்காக நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வழியைத் தயாரிப்பதற்காக, இந்த நிகழ்வில் #Nitrogen4NetZero என்ற முன்முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு, 05 மே 2021

#Nitrogen4NetZero என்பது கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து அதிமேதகு இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் தொடங்கப்பட்ட முன்முயற்சியாகும். நைதரசன் மீது நடவடிக்கைகள் எதுவுமின்றி நிகரப் பூஜ்ஜிய நிலையை அடைய இயலாது மற்றும் நைதரசன் மீதான நடவடிக்கை ஆரோக்கியம், இயல்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பல இணை நன்மைகளை வழங்கும் என்பன இதன் முக்கிய இரண்டு செய்திகளாகும்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சார்பாக வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன இந்நிகழ்வில் வழங்கிய அறிக்கையில், பின்வருமாறு வலியுறுத்தினார்:

'... வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள கார்பன் டை ஒக்சைட் உமிழ்வுகளின் தாக்கத்தை பல தசாப்தங்களாக காலநிலை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நைதரசன் கழிவுப் பிரச்சினையை இதேபோன்ற அவசர வழியில் எதிர்கொள்வதும், அதற்கேற்ப காலநிலை மாற்றம் குறித்த தற்போதைய கலந்துரையாடல்களை விரிவுபடுத்துவதும் முக்கியம் என நான் நம்புகின்றேன்.'

கடந்த ஆண்டு உரையாற்றிய COP26 இன் நியமிக்கப்பட்ட தலைவர் ஆலோக் ஷர்மா இந்த ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்:

'பேரழிவு தரும் புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தைரியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதை தேவைப்படுத்தும் வகையில், காலநிலை மாற்றத்தை சமாளிப்பது எமது வாழ்நாளில் மிகவும் அவசரமாகப் பகிரப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகும்.' ...... 2021 ஆனது, முற்றிலும் காலநிலை சார்ந்த முக்கியமானதொரு ஆண்டாக இருக்கும். கிளாஸ்கோவின் பாதையில் ஒவ்வொரு சர்வதேச நிகழ்விலும் நெய்யப்பட்ட காலநிலை நடவடிக்கைகளின் பொன்னான நூலை நான் காண விரும்புகிறேன்.'

இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிளாஸ்கோவில் COP26 ஐ ஐக்கிய இராச்சியம் நடாத்துவதுடன், வரவிருக்கும் தலைமைப் பதவியானது 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் காலநிலை சார்ந்த லட்சியத்தை துரிதப்படுத்துவதற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது.

COP26 இல், பூஜ்ஜிய கார்பன் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் அவசரத்தையும் வாய்ப்புக்களையும், உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியையும் ஐக்கிய இராச்சியம் நிரூபிக்கும். வெற்றியை உறுதி செய்ய நாடுகள் விரைவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கு உறுதியளிக்க வேண்டும்.

இருப்பினும், நிகரப் பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கு மாறுவதற்காக நைதரசன் மீது நடவடிக்கை தேவைப்படுவதுடன், இது பச்சை வீட்டு வாயு, புவி வெப்பமடைதல் திறன் கொண்ட கார்பன் டை ஒக்சைட்டை விட 300 மடங்கு அதிகமாகும். நைதரசன் மாசுபாட்டைக் குறைப்பதானது காற்று, நீர், பல்லுயிர் வகைமை, அடுக்கு மண்டல ஓசோன் குறைவு, மண், உணவு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் நிலையான அபிவிருத்தியில் பல வெற்றிகளை வழங்குகின்றது. ஆண்டுதோறும் 100 பில்லியன் டொலர்களை மீதப்படுத்தும் திறனை வழங்கும் இந்தப் பிரச்சினைகளை இந்தியாயின் தலைமையிலான 'நிலையான நைதரசன் முகாமைத்துவம்' (UNEP/EA.4/Res.14) தொடர்பான ஐ.நா. சுற்றுச்சூழல் மன்றத் தீர்மானமும், 2030 க்குள் அனைத்து மூலங்களிலிருந்தும் நைதரசன் கழிவுகளை அரைவாசியாகக் குறைக்கும் லட்சியத்தை ஒப்புக் கொண்ட இலங்கையின் தலைமையிலான கொழும்புப் பிரகடனமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தெற்காசியக் கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் (SACEP) உறுப்பு நாடுகளுடனான #Nitrogen4NetZero முன்முயற்சி இந்த முக்கியமான ஆண்டில் காலநிலை நடவடிக்கைகளுக்காக ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வழியைத் தயாரிக்கின்றது. 'ஜி.சி.ஆர்.எஃப். தெற்காசிய நைதரசன் ஹப்' இன் விஞ்ஞான ஆதரவுடன் தயாரிக்கப்படும் இந்த முயற்சி, அதன் உலகளாவிய சவால்கள் ஆராய்ச்சி நிதியின் மூலம் இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களால் ஆதரிக்கப்படுகின்றது. இங்கிலாந்து சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் தலைமையில் உள்ள இந்த மையம் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியுடன் இணைந்து சர்வதேச நைதரசன் முகாமைத்துவ அமைப்பின் மூலம் இணைந்து செயற்படும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.

மேலதிக தகவல்

'காலநிலை மற்றும் பசுமை மீட்புக்கான நைதரசன்' நிகழ்வு பற்றிய விவரங்களுக்கும், #Nitrogen4NetZero பற்றிய மேலதிக தகவலுக்கும், https://www.inms.international/nitrogen4netzero/events ஐப் பார்வையிடவும்

#Nitrogen4NetZero வெளியீட்டு வீடியோவை https://www.youtube.com/watch?v=W6n0MqW5JfY இல் பெற்றுக் கொள்ளலாம்.

உலகளாவிய சவால்கள் ஆராய்ச்சி நிதியின் 'தெற்காசிய நைதரசன் ஹப்' என்பது இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு (யு.கே.ஆர்.ஐ) ஆல் ஆதரிக்கப்படும் ஒரு 20 மிலலியன் பவுண்ட் பெறுமதியான திட்டமாவதுடன், இது தெற்காசியா கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் (SACEP) எட்டு நாடுகளையும் கூட்டாக இணைந்து செயற்படும். இது இங்கிலாந்து சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளவியல் மையத்தால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. 'நைதரசன் மாசுபாடு சிரிப்பதற்குரிய விடயமல்ல' என்பதை https://www.ceh.ac.uk/press/nitrogen-pollution-no-laughing-matter இல் பார்க்கவும்.

Please follow and like us:

Close