எரிசக்திப் பாதுகாப்பு, அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள் குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சருடன் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடல்

எரிசக்திப் பாதுகாப்பு, அதிகரித்த தொழில் வாய்ப்புக்கள் குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சருடன் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடல்

 ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற 5வது இந்து சமுத்திர மாநாடு – ஐ.ஓ.சி. 2021இன் பக்க அம்சமாகவெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்தித்தார்.

 பேராசிரியர் ஜி.எல். பீரிஸை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வரவேற்ற ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சர்இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவும் நட்புறவை நினைவு கூர்ந்தார்.

 2021 டிசம்பர் 02ஆந் திகதி அனுஷ்டிக்கப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட விஜயங்களின் மூலம் நட்புறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சர்அடுத்த வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்தார். ஷேக் அப்துல்லா இலங்கையில் மிகவும் அன்பான முறையில் வரவேற்கப்படுவார் என வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.

 கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான நாட்டின் நிலைமை மற்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து பேராசிரியர் பீரிஸ் வெளிநாட்டு அமைச்சருக்கு விளக்கினார். பலதரப்பு அரங்குகளில்குறிப்பாக மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவை இலங்கை தொடர்ந்தும் பாராட்டுவதாகத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ்வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லுகையில் ஊடுருவுகின்ற எந்தவொரு வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும் வலியுறுத்தினார்.

 எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் வர்த்தக முயற்சிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டின் அளவை அதிகரித்தல் ஆகியன குறித்தும் இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களும் மேலும் கலந்துரையாடினர்.

 வெளிநாட்டு அமைச்சு,

இலங்கை

 2021 டிசம்பர் 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close