உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அயர்லாந்து ஜனாதிபதிக்கு நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அயர்லாந்து ஜனாதிபதிக்கு நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

ஐக்கிய இராச்சியத்தில் வதியும் அயர்லாந்திற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கும் தனது நற்சான்றிதழ் கடிதங்களை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அவர்கள் 2022 பெப்ரவரி 16ஆந் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வில் அயர்லாந்து ஜனாதிபதி அராஸ் அன் உச்டரைன் அவர்களிடம் கையளித்தார்.

1வது காலாட்படை படைப்பிரிவு, ரென்மோர் பர்ரெக்ஸ், கல்வே வழங்கிய கௌரவப் பாதுகாப்பு மற்றும் இராணுவ இலக்கம் 1 இசைக்குழு, கத்தல் ப்ரூகா பர்ரெக்ஸ், டப்ளினினால் இலங்கையின் தேசியக் கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர், நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. உயர்ஸ்தானிகருடன் அவரது கணவர் கலாநிதி சுதத் தல்பஹேவா மற்றும் இரண்டாவது செயலாளர் திமுத்து திஸாநாயக்க ஆகியோர் உயர்ஸ்தானிகராலயத்தில் இணைந்திருந்தனர்.

இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் அதன் மக்களுக்கு இடையிலான வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை ஜனாதிபதி ஹிக்கின்ஸ் அவர்களுக்குத் தெரிவித்தார். ஜனாதிபதி ஹிக்கின்ஸ் ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஐரிஷ் மிஷனரிகளால் கத்தோலிக்கப் பாடசாலைகளை நிறுவியதிலிருந்து தொடங்கிய கல்வி உறவுகள் உட்பட இலங்கைக்கும் அயர்லாந்திற்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை தீவிரப்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

1998 இல் இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைந்து கொண்ட உயர்ஸ்தானிகர் சிறிசேன, லண்டனில் நியமனம் செய்யப்படுவதற்கு முன்னதாக வியன்னாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஒஸ்ட்ரியா குடியரசிற்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றினார்.

அவரது முந்தைய இராஜதந்திர பதவிகளில் மும்பையில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் துணைத் தூதுவர், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரத் தூதரக அமைச்சர், பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் மற்றும் பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் ஆகியன உள்ளடங்கும்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சில் உள்ள எகோல் நேஷனல் டி'அட்மினிஸ்ட்ரேஷன் ஆகியவற்றில் பட்டம் பெற்ற அவர், கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியாவார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

2022 பிப்ரவரி 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close