இலங்கை பட்டிக்களின் அழகு அங்காராவில் போற்றப்பட்டது

 இலங்கை பட்டிக்களின் அழகு அங்காராவில் போற்றப்பட்டது

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எம்.ஆர். ஹசன், இலங்கையின் பட்டிக்கை ஊக்குவிக்கும் நிகழ்வான 'இலங்கை படிக்கின் அழகைக் கண்டறியவும்' என்ற நிகழ்வை 2022 ஜூலை 07ஆந் திகதி தூதுவரின் இல்லத்தில் தொகுத்து வழங்கினார். விருந்தினர்களுக்கு ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் இலங்கை பட்டிக் மற்றும் ஆடை அலங்காரத் துறை பற்றிய மெய்நிகர் விளக்கக்காட்சியும் வழங்கப்பட்டது.

இலங்கையின் பட்டிக் புடவைகள், ஆடைகள், கடற்கரை ஆடைகள், போர்வைகள், சால்வைகள் மற்றும் தலை முக்காடுகள் ஆகியவற்றை அணிந்து, துருக்கிய மொடல் அழகிகள் இந்த நிகழ்ச்சியில் மூன்று சுற்றுக்களில் பங்கேற்றனர். வண்ணமயமான மாலை நிகழ்வு, துருக்கிய ஊடகப் பிரதிநிதிகள் உட்பட அழைக்கப்பட்ட விருந்தினர்களிடமிருந்து பல பாராட்டுக்களைப் பெற்றது.

அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது இதுவே முதல் முறையாவதுடன், இது இலங்கையின் பட்டிக் மற்றும் பட்டிக் துறையின் வலிமையை துருக்கிய ஊடகங்கள் மற்றும் ஏனைய அழைப்பாளர்களுக்கு ஒரு பார்வையை வழங்கியது.

மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர், இலங்கைப் பட்டிக்கின் தனித்துவத்தை தாங்களாகவே அனுபவிக்கும் முகமாக, சாரிகளை உடுத்திக் கொள்ளுமாறு தூதரக ஊழியர்கள் உற்சாகமான விருந்தினர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

விருந்தினர்களுக்கு இலங்கை உணவு வகைகள் மற்றும் சிலோன் தேநீர் வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 ஜூலை 11

Please follow and like us:

Close