இலங்கை - கென்யா இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  எதிர்பார்ப்பு

இலங்கை – கென்யா இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  எதிர்பார்ப்பு

கென்யாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட விளையாட்டு மற்றும் இளைஞர்  விவகாரங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 2021 அக்டோபர் 07ஆந் திகதி நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அவருக்கு அன்பான வரவேற்பும் உயர் உபசரணை மரியாதையும் அளிக்கப்பட்டது. ஏற்றுமதி வலயங்களுக்கான இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்கவும் அமைச்சர் நாமலுடன் இணைந்திருந்தார். இலங்கை உயர்ஸ்தானிகர் கனநாதன் மற்றும் கென்யாவைச் சேர்ந்த இலங்கையைச் சேர்ந்த தொழில் முனைவோர் குழுவினர் அமைச்சர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

2021 அக்டோபர் 08ஆந் திகதி தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் முதல் நாளில், கென்யாவின் சுற்றுலா மற்றும்  வனவிலங்கு அமைச்சர் நஜிப் பலாலாவுடன் இணைந்து, நைரோபியில் உள்ள இலங்கை விமான நிறுவனத்தின் பயணிகள் சேவை முகவர் அலுவலகத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார். விருந்தினர்களிடம் உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் திறனைத் திறக்கவும், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை ஈர்ப்பதற்கும் நேரடி விமான இணைப்பு மிக முக்கியமானது எனத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் கனநாதன் முன்னெடுக்கும் முயற்சிகளை, இந்த விமான இணைப்பு மற்றும் நைரோபியில் உள்ள ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பயணிகள் சேவை முகவர் அலுவலகம் ஆகியன எளிதாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தனது உரையில், கென்யாவும் இலங்கையும் இருதரப்பு ஏற்பாடொன்றுக்குள் நுழைய வேண்டும் என முன்மொழிந்த  அமைச்சர் பாலாலா, சுற்றுலா மற்றும் வனவிலங்கு நிர்வாகத்தில் உள்ள ஏனைய பரிமாற்றத் திட்டங்களை முறையாக மாற்றியமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். அமைச்சர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்ற உயர்ஸ்தானிகர் கனநாதன், இலங்கை மற்றும் கென்யாவிற்கான முதன்மைத் தொழில்களில் சுற்றுலா முக்கியமானதாக இருப்பதாகத் தெரவித்ததுடன், புவியியல் அமைவிடம் காரணமாக இரு நாடுகளும் கலாச்சாரம் மற்றும் தன்மையில் தனித்துவமானதாக இருப்பதால், பரஸ்பர நலனுக்காக ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். எந்தவொரு மிகைப்படுத்தலும் இல்லாமல், விமான இணைப்பானது கென்யா மற்றும் ஆபிரிக்காவுடன் இருதரப்பு உறவுகளில் ஒரு திருப்புமுனையாக அமைவதுடன், எதிர்காலத்தில் ஆபிரிக்காவுடனான இலங்கையின் கூட்டுறவுக் கட்டமைப்பை வளர்த்துக் கொண்டு, நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதன் மூலம், இரு கண்டங்களிலும் ஒன்றாக வளர்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தொடக்க நிகழ்வின் போது, உள்நாட்டு சுற்றுலா தர அடையாளங்களான 'மாயமான கென்யாவை மீளக் கண்டறிதல்' மற்றும் 'கவர்ச்சிகரமான இலங்கையை மீளக் கண்டறிதல்' ஆகியன கென்யா மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர்களால் தொடங்கப்பட்டது. இருதரப்பு சுற்றுலாத் தன்மையை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் தரங்கள் பயன்படுத்தப்படல்  வேண்டும் என அங்கீகரிக்கப்பட்டது. விழாவில் இரண்டு கென்ய யானைகளுக்கு 'டிகிரி' மற்றும் 'மால்' ஆகிய இலங்கைப் பெயர்கள் சூட்டப்பட்டன.

பயணிகள் சேவை முகவர் அலுவலகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராவன் பெர்னாண்டோவை வாழ்த்திய  அமைச்சர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர், கென்யாவில் இலங்கை விமானங்களை ஊக்குவிப்பதற்கான அவரது பணிகளுக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

கென்யாவின் விளையாட்டு, பாரம்பரிய மற்றும் கலாச்சார அமைச்சர் கலாநிதி. அமினா முஹம்மத்தை விளையாட்டுக்கள், பாரம்பரிய மற்றும் கலாச்சார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்தார். இரு நாடுகளிலும் விளையாட்டுகளை வளர்ப்பதற்கான கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்து அமைச்சர்கள் கருத்துக்களைப்  பரிமாறிக் கொண்டதுடன், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்குவதற்கான இருதரப்பு நெறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்தனர்.

மேலும் கென்யாவின் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஜோசப் வக்காபாவை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  சந்தித்தார். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பொருளாதார செழிப்புக்களை அடைந்து கொள்வதற்காக, அந்த நாடுகளின் தேவைகள் குறித்த விரிவான கலந்துரையாடலில் அமைச்சர்கள் ஈடுபட்டனர். செயன்முறைகளை தானியக்க ரீதியான மாற்றி, செயற்றிறனை அதிகரிப்பதற்காக, அரச சேவையில் டிஜிட்டல் ஒற்றைச் சாளர அமைப்பை உருவாக்குவது குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர். இது சம்பந்தமாக, அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் இணைவதற்கு  இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

உகாண்டா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மைக்கேல் நுவாகாபா மற்றும் காண்டாவில் முன்னணி வணிகர்களில்  ஒருவரும், உகாண்டா, எம்ப்காவில் ஒரு கிரிக்கெட் பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி வருபவருமான ரூவான் ஜயரத்ன ஆகியோர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க ஆகியோருக்கு நைரோபியில் மதிய போசன வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மதிய போசன வைபவத்தின் போது, உகாண்டாவில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையின் ஆதரவை அவர்கள் கோரினர். 19 வயதிற்குக் கீழான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக உகாண்டா கிரிக்கெட் வீரர்கள் அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் பங்கேற்பதற்கும், மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து திறனை வெளிப்படுத்தும் பயிற்சி வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும் அமைச்சர் நாமல் ஆலோசனை வழங்கினார்.

விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமான சந்தித்த  நைரோபியை அடிப்படையாகக் கொண்ட அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தானின் உயர்ஸ்தானிகர்களும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பிரதி உயர்ஸ்தானிகர்களும் அவர்களது நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு ஈடுபாடுகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமானப் போக்குவரத்து  மற்றும் ஏற்றுமதி வலயங்களுக்கான இராஜாங்க அமைச்சர் உயர்ஸ்தானிகர் கனநாதனுடன் இணைந்து, நைரோபியில் இலங்கை சமூகத்தின் முன்னிலையில் சுருக்கமான மத நலன்களுக்காக கென்யாவில் ஒரு பொது இடத்தில் நிறுவப்பட்ட  முதலாவது புத்தர் சிலையைப் பார்வையிட்டனர். உயர்ஸ்தானிகர் கனநாதனால் இந்த சிலை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நிறுவப்பட்டது. அமைச்சர்கள் உயர்ஸ்தானிகராலயத்துக்கும் விஜயம் செய்தனர்.

அனைத்து சந்திப்புக்களிலும் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க, கென்யாவில் இலங்கையின்  நலன்களை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல்களில் முனைப்புடன் பங்களிப்புச் செய்தார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

நைரோபி

2021 அக்டோபர் 11

  

Please follow and like us:

Close