இலங்கையும் நேபாளமும் கட்டுமானத் துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

இலங்கையும் நேபாளமும் கட்டுமானத் துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

இலங்கை கட்டுமான நிறுவனங்கள் நேபாள பௌதீக உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் தொடர்பு கொள்ளவும், கூட்டு முயற்சிகள் உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பொருந்தும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து மெய்நிகர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தன.

நேபாள பௌதீக உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சின் அபிவிருத்தி உதவி ஒருங்கிணைப்பு மற்றும் தரப் பிரிவின் இணைச் செயலாளர் கௌரவ. கேசப் குமார் ஷர்மா, வீதிப் பணிகள் மற்றும் போக்குவரத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார். நீர் மின்சக்தி அபிவிருத்தி, கட்டடக்கலை மற்றும் பொறியியல் வடிவமைப்பு, ஆலோசனைப் பணிகள் மற்றும் கட்டிடக் கட்டுமானம் போன்ற ஏனைய துறைகளில் பொதுவான வாய்ப்புக்களை வழங்கும் அதே வேளையில் தேவைப்படும் அளவுகோல்களையும் அனுபவத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். நேபாளத்தில் பௌதீக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் போக்குவரத்தில் இருக்கும் அளவுகோல்கள் மற்றும் வாய்ப்புக்களை கௌரவ. ஷர்மா மேலும் விவரித்தார். பங்கேற்பாளர்கள் சரியான நேரத்தில் நேருக்கு நேர் பௌதீக ரீதியாக சந்திக்கும் எதிர்கால வாய்ப்பை வரவேற்றனர்.

நேபாளத்தில் உள்ள அரசாங்க அதிகாரிகளுடனான சந்திப்பை எளிதாக்குவதற்காக, 21 டிசம்பர் 2021 வணிக அமர்வின் போது, கட்டுமானத் துறையின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், பிப்ரவரி 7ஆந் திகதி மெய்நிகர் சந்திப்பு நடாத்தப்பட்டது. இத்துறையின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள நீர்மின்சாரம், கட்டிட நிர்மாணங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் துறை நிறுவனங்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக, நேபாளத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அரசாங்கப் பங்காளிகளுடன் எதிர்காலத்திலும் இதேபோன்ற கவனம் செலுத்தப்பட்ட மற்றும் ஆழமான ஈடுபாடுகளை நடாத்த ஊக்குவிக்கப்பட்டது.

இலங்கையின் கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கையின் பிரதான கட்டமைப்பாளர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இலங்கை நிறுவனங்கள் மெய்நிகர் சந்திப்பில் பங்குபற்றின. தூதுவர் ஹிமாலி அருணதிலக மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்றுமதி சேவைகள் பணிப்பாளர் இந்துமினி கொடிகார ஆகியோரும் இச் சந்திப்பில் உரையாற்றினர்.

இலங்கைத் தூதரகம்,

காத்மாண்டு

2022 பிப்ரவரி 09

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close