இலங்கையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டில்களை வழங்குவதற்கு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு

இலங்கையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டில்களை வழங்குவதற்கு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு

ஓமானில் உள்ள இலங்கை சமூகத்திடம் ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்த் மேற்கொண்ட வேண்டுகோளின் பேரில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள், வங்கித் துறையில் பணிபுரியும் இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் ஓமானில் பணியாற்றும் இலங்கையின் நில அளவையாளர்கள் சகோதர அமைப்பினர்இலங்கையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐந்து தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க கியோரிடம் இந்த ஐந்து கட்டில்களையும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கையளித்தார். இந்த தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் பதவிய, நுவரெலியா, மஹியங்கனை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐந்து அரச மருத்துவமனைகளுக்கு, விநியோகிக்கப்படவுள்ளன.

தொற்றுநோயின் காரணமான இந்த சவாலான தருணத்தில் இலங்கையில் உள்ள சக குடிமக்களுக்கு அக்கறை காட்டும் இந்த தாராளமான செயலுக்காக தூதுவர் அமீர் அஜ்வத் ஓமானில் உள்ள இலங்கையின் தொழில்முறை சமூகத்திற்கு தனது உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்தார். வங்கித் துறையில் உள்ள இலங்கை நிபுணர்களிடமிருந்தும், நில அளவையாளர் சகோதரர்களிடமிருந்தும் நன்கொடைகளை ஒருங்கிணைத்தமைக்காக, ஓமான் சுல்தானேற்றின் மத்திய வங்கியின் திரு. லலித் குமாரவிற்கும், ஓமானிலுள்ள இலங்கை நில அளவையாளர்கள் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் ரவிந்தீர கல்லங்கொடவிற்கும் தூதுவர் தனது விஷேடமான நன்றிகளைத் தெரிவித்தார். இதுதொடர்பாக தூதரகத்திற்கு ஆதரவளித்தமைக்காக ஓமானில் உள்ள இலங்கை சமூகக் கழகத்திற்கும் தூதுவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கட்டில்களைக் கையளிக்கும் வைபவம் 2021 அக்டோபர் 04ஆந் திகதி கொழும்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைத் தூதரகம்

மஸ்கட்

2021 அக்டோபர் 12

Please follow and like us:

Close