இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் ரஷ்யாவில் ஊக்குவிப்பு

 இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் ரஷ்யாவில் ஊக்குவிப்பு

பல்வேறு நாடுகளின் முகமூடிகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய கண்காட்சிகள் மற்றும்  விரிவுரைகளை ஏற்பாடு செய்வதற்காக நாடு முழுவதும் பயணம் செய்துள்ள ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம், 'பாரம்பரிய முகமூடிகள் மற்றும் உலகின் உருவங்கள்' என்ற நடமாடும் கிளப்-மியூசியம்- விரிவுரை மண்டபத்திற்கு இலங்கையின் பாரம்பரிய முகமூடிகளின் தொகுப்பை வழங்கியது.

இலங்கையின் தேசிய கைவினை சபையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட முகமூடிகளில், இலங்கை கைவினைக்  கலைஞர்களினால் கைகளால் செதுக்கப்பட்ட கோலம் முகமூடிகள், சன்னி முகமூடிகள், சலு பாலியுயா முகமூடிகள், ரக்ஷா முகமூடிகள் போன்றவை அடங்கும்.

பல்வேறு பிரதேசங்களின் முகமூடிகள் மற்றும் உருவங்கள் தொடர்பாக அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற  விரிவுரையின் போது நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வில் இலங்கையின் கலாச்சாரம் தொடர்பான முகமூடிகள் மற்றும் சடங்குகள் குறித்து தூதரகத்தின் கலாசாரம் மற்றும் கல்விக்கான முதல் செயலாளர் நிரோஷா எச். ஹேரத் சுருக்கமாக விளக்கினார். தூதரகத்தால் வழங்கப்பட்ட முகமூடிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் மீதான உண்மையான ஆர்வத்தை பார்வையாளர்கள் வெளிப்படுத்தினர்.

'பாரம்பரிய முகமூடிகள் மற்றும் உலகின் உருவங்கள்' என்ற அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட முகமூடிகள்  இலங்கை தொடர்பான விழிப்புணர்வை பார்வையாளர்களிடையே அதிகரிக்க உதவும் என தூதரகம் கருதுகின்றது.

இலங்கையின் கலாச்சாரம், அதன் புராதன வரலாறு மற்றும் பாரம்பரியங்களை ரஷ்யாவில் பிரபல்யப்படுத்துவதற்காக தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தூதரகம்,

மொஸ்கோ

2021 அக்டோபர் 29

Please follow and like us:

Close