இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கென்யாவில் கலந்துரையாடல்

 இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கென்யாவில் கலந்துரையாடல்

கென்யாவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, கென்ய வனவிலங்கு மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. நஜிப் பலாலாவை 2021 செப்டெம்பர் 14ஆந் திகதி சந்தித்தார். அமைச்சர் ரத்நாயக்கவுடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதனும் இணைந்திருந்தார்.

இலங்கை அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பலாலா, குறிப்பாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் மற்றும் சர்வதேச சுற்றுலா போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் அந்த வளங்களை சந்தைப்படுத்துவதற்கான தேசிய உத்திகளில் பல ஒற்றுமைகள் இரு நாடுகளுக்கும் உள்ளதாகத் தெரிவித்தார். உள்ளூர் மற்றும் சர்வதேச நடைமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க இலங்கையில் வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதே தனது அமைச்சின் பொறுப்பாகும் என்றும், வனவிலங்குகள் இலங்கையின் சுற்றுலாவுக்கு முக்கிய ஈர்ப்புக்களில் ஒன்றாக விளங்குவதாகவும் அமைச்சர் ரத்நாயக்க விளக்கினார். வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதன் மூலம்  கென்யாவில் பல்லுயிர்ப் பெருக்கத்தை வெற்றிகரமாக வளர்ப்பதனைப் பாராட்டிய அமைச்சர் ரத்நாயக்க, இருதரப்புத் திட்டத்தின் கீழ் அந்தப் பகுதிகளில் கென்யாவின் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றால் இலங்கை பயனடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். வனவிலங்குகள் மற்றும் அனுபவத்தின் இயற்கைச் சூழல் குறித்த இலங்கையின் பாதுகாப்புத் திட்டத்திலிருந்து கென்யாவும் பயனடைய முடியும் என கென்ய அமைச்சர் நேர்மறையாக பதிலளித்தார்.

இலங்கை மற்றும் கென்யாவில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் இருதரப்பு செயற்பாடுகளை மேம்படுத்துவதுடன், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிபுணத்துவத்தின் அளவு குறித்து அமைச்சர் ரத்நாயக்க முன்மொழிந்தார். வனவள அதிகாரிகளுக்கான பயிற்சி, வனவிலங்குப் பூங்கா முகாமைத்துவம், தொழில்நுட்பப் பரிமாற்றம், வனவிலங்கு சுகாதாரப் பாதுகாப்பு, மனித - யானை மோதலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள், வாழ்விட செறிவூட்டல் போன்ற செயல்பாடுகளிலான கென்யாவின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கை அமைச்சர் குறிப்பிட்டார். கென்யாவின் வனவிலங்கு சுற்றுலா, கென்யாவில் இலங்கை வனவிலங்கு அதிகாரிகளுக்கான பயிற்சி, இலங்கையில் மற்றும் வனவாழ்வு நிறைந்த ஏனைய பகுதிகளில் தேவைக்கேற்ப வனவிலங்கு பயிற்சி நிறுவனத்தை அமைக்க உதவுதல் ஆகியன குறித்து கென்யா பரிசீலிக்க முடியும் என கென்ய அமைச்சர் பதிலளித்தார்.  விலங்கியல் பூங்காங்களுக்கு விலங்குகளை பரிமாறிக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கிடையேயான ஐந்து தசாப்த கால இராஜதந்திர உறவுகள் பல ஆண்டுகளாக ஒத்துழைப்பின் பல துறைகளில் விரிவடைந்துள்ளதாகவும், வனவிலங்குப் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு வெற்றி நிலையை உருவாக்கும் என்றும் உயர்ஸ்தானிகர் கனநாதன் பரிந்துரைத்தார். உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிடுகையில்,  இரு நாடுகளும் கொழும்புக்கும் நைரோபிக்கும் இடையிலான நேரடி விமான இணைப்பை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அதிகபட்சமாகப் பயன்படுத்தி, வனவிலங்குகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுலாவை மேம்படுத்துதல், வர்த்தகம், மக்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் திறன் அபிவிருத்தி உதவி போன்ற பொதுவான ஆர்வமுள்ள பகுதிகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இலங்கை மற்றும் கென்யா ஆகியவற்றுக்கு இடையே சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கென்ய அமைச்சரிடம் வலியுறுத்தினார். மேலும், விலங்கு பரிமாற்றத் திட்டங்கள்,  விலங்கு வாழ்க்கைக் கட்டுப்பாடு, விலங்கு மருத்துவமனை வசதிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான வன அதிகாரிகளுக்கான பயிற்சி ஆகிய விடயங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடி, இரு நாடுகளினதும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த வகையில் சுற்றுலா மற்றும் வனவிலங்குகளை வளர்ப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு இரு அமைச்சர்களும் தீர்மானித்தனர்.

நடைமுறை மற்றும் பரஸ்பரம் நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை அடைந்து கொள்வதற்காக தமது  உரையாடலைத் தொடர்வதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

நைரோபி

2021 செப்டம்பர் 15

Please follow and like us:

Close