இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான வெபினார் வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான வெபினார் வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு

2021 மே 04ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பிலான வெபினாரில், புகழ்பெற்ற சர்வதேச சட்ட மேதைகளான மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் மொரொக்கோ மற்றும் சூடானுக்கான நிர்வாகப் பணிப்பாளரும், செயற்றிட்டங்களின் தலைவருமான பேராசிரியர் ரெடிகர் வொல்ஃப்ரம் மற்றும் நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் யு.ஐ.டி, சட்ட பீடத்தில் அமைந்துள்ள கடல் சட்டத்திற்கான நோர்வே நிலையத்தின் பணிப்பாளரான பேராசிரியர் ட்ரம்ஸோ, பேராசிரியர் டோர் ஹென்ரிக்சன் ஆகியோர் பேச்சாளர்களாக இடம்பெற்றிருந்தனர்.

தரமற்ற கப்பல் போக்குவரத்துக்கு எதிரான இரண்டாவது வரிசைப் பாதுகாப்பாகவும், அரச செயற்படுத்தலைக் கொடியிடுவதற்கான காப்புப் பிரதியாகவும் துறைமுக அரச கட்டுப்பாட்டு ஆய்வுகள் கருதப்படுகின்றன. பிராந்திய ஒப்பந்தங்களின் நிறைவை ஊக்குவிக்கும் கப்பல்கள் மற்றும் வெளியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் பிராந்திய ஒத்துழைப்பு குறித்த சர்வதேச கடல்சார் அமைப்பு, A.682(17) என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. நாடொன்றில் துறைமுகத்திற்குச் செல்லும் ஒரு கப்பல் பொதுவாக பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்குச் செல்லும், ஆகவே, தரமற்ற கப்பல்களில் கவனம் செலுத்துவதற்கும் பல ஆய்வுகளைத் தவிர்ப்பதற்கும் ஆய்வுகள் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்படுமானால் அது மிகவும் திறமையானதாக இருக்கும். முடிந்தவரை பல கப்பல்களை ஆய்வு செய்வதனை இது உறுதி செய்கின்ற அதே நேரத்தில் தேவையற்ற ஆய்வுகள் மூலம் கப்பல்கள் தாமதமாக வருவதனைத் தடுக்கின்றது. கப்பல்களின் தரநிலைகளுக்கான முதன்மைப் பொறுப்பு கொடிக்கு சொந்தமான அரசிலேயே உள்ளது - ஆனால் துறைமுக அரச கட்டுப்பாட்டிற்கான தரமற்ற கப்பல்களை அடையாளம் காண 'பாதுகாப்பு வலையமைப்பை' வழங்குகின்றது.

துறைமுக அரச கட்டுப்பாட்டின் பரந்த நோக்கத்தில், வெபினார் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. துறைமுக அரச கட்டுப்பாடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மற்றும் கடல் சட்டம் ஆகியவற்றை முதலாம் அமர்வு கையாண்டது. இந்தப் பகுதி இயற்கையில் மிகவும் தத்துவார்த்தமாக இருந்ததுடன், துறைமுக அரச கட்டுப்பாட்டின் அர்த்தம் மற்றும் நோக்கம், கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மற்றும் துறைமுக அரச கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கான உறவு, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் மற்றும் ஏனைய சர்வதேசக் கருவிகளின் கீழ் துறைமுக அரச கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் சட்ட ஆட்சி ஆகியன கலந்துரையாடப்பட்டன. துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒன்றோடொன்றுனான தொடர்பு, சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு மற்றும் துறைமுக அரச கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை வழங்கும் தொழிலாளர் அமைப்பு சர்வதேசத்தால் இயற்றப்பட்ட சர்வதேச ஆவணங்களின் சுருக்கமான கலந்துரையாடல் ஆகியவை இதில் உள்ளடங்கும்.

இரண்டாம் அமர்வு, பிராந்திய நடைமுறைகளை ஒத்திசைத்தல் மற்றும் வலுப்படுத்துதலை நோக்கி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாட்டைக் கையாண்டது. இந்தப் பகுதியில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுக அரச கட்டுப்பாட்டை மேம்படுத்தக்கூடிய சவால்கள், வாய்ப்புக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை அடையாளம் காணும் நோக்கில், ஏனைய துறைமுக அரச கட்டுப்பாட்டு விடயங்களின் வழியிலான இந்து சமுத்திரப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வும் இந்த பகுதியில் உள்ளடங்கும். இரண்டாவதாக, இந்த அமர்வில் கடல்வழி மற்றும் துறைமுக அரச கட்டுப்பாடு, கப்பல்களில் இருந்து மாசுபடுவதைத் தடுப்பதற்கான சர்வதேச சாசனம், கடலில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச சாசனம் மற்றும் கடலில் மோதல்களைத் தடுப்பதற்கான சர்வதேச விதிமுறைகள் சார்ந்த சாசனம், இது தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது. மூன்றாவதாக, நாடுகடந்த கடல்சார் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்குப் பதிலளிப்பதற்காக துறைமுக அரச கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்தும், இது தொடர்பாக எழக்கூடிய சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக, துறைமுக அரச கட்டுப்பாட்டின் சட்டபூர்வமான அடித்தளம் மற்றும் துறைமுக அரச கட்டுப்பாடு மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையேயான ஒன்றோடொன்றுடான தொடர்பு உட்பட துறைமுக அரச கட்டுப்பாட்டைப் பற்றியதொரு நல்ல புரிதல் அவசியம் என்றும், உள்நாட்டு துறைமுக அரச கட்டுப்பாட்டு ஆட்சிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு ஒப்புக்கொண்டது. இது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நோக்கங்களை மேலும் அதிகரிக்கும். துறைமுக அரச கட்டுப்பாட்டைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஜகார்த்தா நடைமுறை, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயற்றிட்டம் (2017-2021) மற்றும் றுபுஆளுளு இன் பணித் திட்டத்தின் நோக்கங்களை திறம்பட செயற்படுத்துவதற்கு உதவும் அதே வேளை, இது இந்து சமுத்திரப் பகுதி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு பிராந்தியக் கூட்டுப் பிரதிபலிப்புக்களை ஊக்குவித்து, பகிரப்பட்ட அடையாளத்தையும் வலுப்படுத்தும். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்கான கடல் வளங்களை நிலையான முறையில் பயனடையச் செய்வதில் துறைமுக அரச கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பொருத்தப்பாடு சிறப்பிக்கப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தவரை, துறைமுக அரச கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயற்படுத்துதல் மற்றும் கடல் நிர்வாகத்துடன் இணைக்கப்பட்ட ஏனைய துணை பிராந்திய மற்றும் சர்வதேச ஆவணங்களில் கைச்சாத்திடுதல், நாட்டை ஒரு கடல் மற்றும் தளவாட மையமாக திறம்பட மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுடன் சிறப்பாக ஊக்குவிக்கப்பட்டு, அதன் புவி-மூலோபாய இருப்பிடத்தை மேம்படுத்துகின்றது.

இதில் கலநது கொண்ட ஏனைய பேச்சாளர்களில், வணிக கப்பல் செயலகத்தைச் சேர்ந்த கடலியல் வல்லுனரான கெப்டன் உபுல் பீரிஸ், இலங்கை கடலியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி. டான் மாலிகா குணசேகர மற்றும் சட்டமா அதிபர் தணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் நாயகம் திரு. விகும் டி ஆப்ரூ ஆகியோர் அடங்குவர். வெபினாரை வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹசந்தி உருகோடவத்தே திசாநாயக்க நிர்வகித்தார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கல்வியியலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 50 பங்கேற்பாளர்கள் இந்த வெபினாரில் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மே 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close