இத்தாலிக்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட தூதுவர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை ரோமில் உள்ள வெளிநாட்டு அமைச்சிற்கு கையளிப்பு

இத்தாலிக்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட தூதுவர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை ரோமில் உள்ள வெளிநாட்டு அமைச்சிற்கு கையளிப்பு

இத்தாலிக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் ஜகத் வெள்ளவத்த, 2022 பெப்ரவரி 02 ஆந் திகதி இத்தாலியக் குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சில் உபசரணைப் பிரதானி, தூதுவர் இனிகோ லம்பேர்டினியிடம் தனது நற்சான்றிதழின் திறந்த பிரதியைக் கையளித்தார்.

தனது நற்சான்றிதழின் திறந்த பிரதியைக் கையளிப்பதற்கு முன்கூட்டிய சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக உபசரணைப் பிரதானிக்கு நியமிக்கப்பட்ட தூதுவர் ஜகத் வெள்ளவத்த நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள், சமூக விவகாரங்கள், கல்வி, கலாச்சாரம் போன்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. உபசரணைப் பிரதானியான தூதுவர் இனிகோ லம்பெர்டினி, பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவை நினைவு கூர்ந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவை மேலும் மேம்படுத்துவதற்காக புதிய தூதருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது நியமிக்கப்பட்ட தூதுவருடன் தூதரகப் பொறுப்பாளர் சிசிர செனவிரத்ன கலந்துகொண்டார்.

இலங்கைத் தூதரகம்,

ரோம்

2022 பிப்ரவரி 09

Please follow and like us:

Close