ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவத்தை இலங்கை உறுதி

ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவத்தை இலங்கை உறுதி

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொனன்ன அவர்கள் 2022 ஜனவரி 25ஆந் திகதி கலப்பின முறையில் நடைபெற்ற தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்பக் கழகத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக் கூட்டத்தில், ஆசிய தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர் உறவுக் குழுவின் இணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் கலாநிதி. டோங்சாட் ஹொங்லடரோம்ப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் கலாநிதி. ஈடன் வை. வூன், முன்னாள் துணைப் பிரதமரும் தாய்லாந்தின் முன்னாள் கல்வி அமைச்சரும், சபையின் துணைத் தலைவர்களில் ஒருவருமான கலாநிதி. சுவிட் குங்கிட்டி, சபையின் ஏனைய உறுப்பினர்கள், தாய்லாந்து வெளிநாட்டு அமைச்சின் பிரதி நிரந்தர செயலாளர் சுடின்டோர்ன் கோங்சாக்டி, பங்களாதேஷ், கனடா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பேங்கொக்கில் உள்ள கம்போடியா, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு, மலேசியா, நேபாளம், வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2022ஆம் ஆண்டிற்கான திட்டங்களை விரிவுபடுத்தும் கல்வித் திட்டங்கள் மற்றும் கற்பித்தல், ஆராய்ச்சி, வெளியடைவு, பூகோள வலையமைப்பு, புதிய பல்கலைக்கழகக் கூட்டாண்மைகள், ஆசிய தொழில்நுட்ப நிலையத் திட்டம், ஆசிய தொழில்நுட்ப வியூகப் பணிக்குழு போன்றவற்றை சபை விவரித்தது.

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் போது, ஆசிய தொழில்நுட்பக் கழகத்தின் இலக்குகளை அடைவதற்கான மகத்தான முயற்சிகளுக்காக, இணையவழியில் இணைந்த தூதுவர் கொலொன்ன ஆசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் கலாநிதி. ஈடன் வை. வூனுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச திறன் அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக சமீபத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள், இலங்கையில் திறன் அபிவிருத்தித் துறையில் சாத்தியமான பங்காளித்துவங்கள் பற்றிய இலங்கையின் தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் தாய்லாந்து மற்றும் இலங்கையில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையே திறன் அபிவிருத்திக் கூட்டாண்மைத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றை தூதுவர் கொலொன்ன எடுத்துரைத்தார்.

இலங்கை 1977ஆம் ஆண்டு முதல் ஆசிய தொழில்நுட்ப நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் நீண்டகால பங்காளித்துவங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களால் பயனடைந்துள்ளது.

தாய்லாந்தில் உள்ள இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 பிப்ரவரி 03

Please follow and like us:

Close